நடிகர் சிம்பு கொரோனா காலத்திற்கு முன்பாகவும், கொரோனா காலத்தின் போதும் வெகுவாக உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். ஆனால் இப்போதோ, அப்படியே ஆளே மாறிவிட்டார். இந்த மாற்றம் எப்படி நடந்தது? அவ்வளவு எடையை குறைக்க சிம்பு செய்தது என்ன? வாங்க தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை அதிகரித்த சிம்பு..
நடிகர் சிம்பு, 101கிலோ வரை உடல் எடையுடன் இருந்தார். அப்போது தனது தனிப்பட்ட வாழ்விலும் சினிமா வாழ்விலும் சில கஷ்ட காலங்களை சந்தித்த அவர், உடல் எடை ஏறியதாக கூறப்பட்டது. ஆனால் உடல் எடை ஏறிய சில மாதங்களிலேயே அதை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் சிம்பு. அவர் இதை சில மாதங்களுக்குள்ளாகவே செய்து முடித்தார். அது எப்படி?
மேலும் படிக்க | Trisha: ‘இது தெரியமா போச்சே..’ த்ரிஷாவின் மென்மையான அழகின் ரகசியம் இதுதானா?
காலையில் நடைப்பயிற்சி..
சிம்பு, இயல்பாகவே அதிக செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் திறன் கொண்டவர். செய்த ஒரே செயலையே மீண்டும் மீண்டும் செய்வது இவருக்கு மிகவும் கடினம் என கூறப்படுகிறது. ஆனால், உடல் எடையை இளைக்க வைக்க சில முறை நாம் செய்த செயலையே செய்ய வேண்டி இருக்கும். இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார், சிம்பு. அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கி கொண்டார்.
உடற்பயிற்சி:
நடைப்பயிற்சியை முடித்தவுடன் உடலில் உள்ள பிற தசைகளுக்கு பயிற்சி கொடுக்கும் உடற்பயிர்சியில் இறங்கி விடுவார், சிம்பு. வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வதை சிம்பு வழக்கமாக்கி கொண்டார். இது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் பின்பு நிறையவே முயற்சிகள் செய்து ஒரு வழக்கத்திற்குள் வந்து விட்டார் சிம்பு.
கடின உழைப்பு முக்கியம்..
சிம்பு, கொரோனா காலத்திற்கு முன்பாகவே பயங்கரமாக வெயிட் போட்டார். அதைக்குறைக்கும் முயற்சியில் இறங்கிய போதுதான், கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. இதனால், இவரது உடல் எடை ஏற தொடங்கியது. ஒரு முறை, டைம் லேப்சில் செட் செய்து, தனது வீடு முழுவதும் சுற்றி சுற்றி ஓடும் சிம்புவின் வீடியோ வைரலானது. இதன் பிறகுதான், சிம்பு எவ்வளவு பெரிய கடின உழைப்பாளி என்பதே அனைவருக்கும் தெரிந்தது.
நோ-நான் வெஜ்:
சிம்புவின் உடல் எடை ஏறியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதிகமான துரித உணவுகளையும் மாமிசம் சார்ந்த உணவுகளையும் சாப்பிட்டதுதான் என்று கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு இவர் 5 பிரியாணி சாப்பிட்டதாக கூட கூறப்படுகிறது. ஆனால், வெயிட் லாஸ் ஜர்னியில் இறங்கியவுடன் நான் வெஜிட்டேரியனாக இருந்தவர், முழுக்க முழுக்க வெஜிட்டேரியனாக மாறிவிட்டாராம். இதுவும் இவர் உடல் எடையை விரைவில் குறைக்க ஒரு காரணமாக இருந்தது.
விளையாட்டுகள்:
சிம்பு, உடற்பயிற்சி செய்வது மற்றும் டயட் இருப்பதை தாண்டி தனது உடலுக்கு உழைப்பு கொடுக்கும் வகையில் சில செயல்களில் ஈடுபட்டார். கிடிக்கெட் விளையாடுவது, டென்னிஸ் மற்றும் பாட்மிட்டன் பயிற்சிகளில் தனது நண்பர்களுடன் ஈடுபடுவது என தன் உடலுக்கு உழைப்பு கொடுத்துக்கொண்டே இருந்தார் சிம்பு.
நீங்களே சமைத்து பழகுங்கள்..
சிம்பு, டயட் இருப்பது மட்டுமன்றி, தான் சாப்பிட வேண்டிய உணவுகளை தானே சமைத்தாராம். இது, அவரது உடல் எடையை குறைப்பதற்கு பெரும் பங்காக அமைந்துள்ளது. மேலும் டென்னிஸ் பேட்மிட்டன் உடன் சேர்த்து பாக்ஸிங் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார், நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார். இவரது வெயிட் லாஸ் ஜர்னி, இன்று வரை பலருக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ