சருமத்தில் இந்த அறிகுறிகள் இருக்கா? நீரிழிவு நோயாக இருக்கலாம்...உடனே மருத்துவரை பாருங்க!!

Diabetes Symptoms: நீரிழிவு நோயின் அறிகுறிகள் நமது சருமத்திலும் தோன்றக்கூடும். தோலில் காணப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 31, 2023, 06:47 PM IST
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.
  • இந்த நோய் எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளலாம்.
  • இந்த நோயின் சில பொதுவான அறிகுறிகளை பற்றி அறிந்துகொண்டு கவனமாய் இருப்பதே இதன் ஆபத்தை தணிக்க சிறந்த வழி.
சருமத்தில் இந்த அறிகுறிகள் இருக்கா? நீரிழிவு நோயாக இருக்கலாம்...உடனே மருத்துவரை பாருங்க!! title=

நீரிழிவு நோய் என்பது உலகெங்கிலும் உள்ள பலரை பாதித்துள்ள ஒரு நோயாகும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது இந்த நோய் ஏற்படுகின்றது. இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை தொர்ந்து அதிகரித்து வருகின்றது. வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவை இந்த நோய் வருவதற்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

இந்த நோய் எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளலாம். இந்த நோயின் சில பொதுவான அறிகுறிகளை (Symptoms of Diabetes) பற்றி அறிந்துகொண்டு கவனமாய் இருப்பதே இதன் ஆபத்தை தணிக்க சிறந்த வழி. நீரிழிவு நோயின் அறிகுறிகள் நமது சருமத்திலும் தோன்றக்கூடும். தோலில் காணப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1. கருமையான திட்டுகள்

உடலில் அதிகப்படியான இன்சுலின் உங்கள் கழுத்து, அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் கருமையான திட்டுகளை ஏற்படுத்தும். இது பொதுவாக ப்ரீடயாபயாட்டிஸின் அறிகுறியாகும். இது மருத்துவ ரீதியாக அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

2. கட்டிகள் 
சர்க்கரை நோய் (Diabetes) நேரடியாக கட்டிகளை ஏற்படுத்தாது. உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை தொற்றுநோய்களுக்கு ஆளாக்கலாம். இது குணமடைய அதிக நேரம் எடுக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது இந்த கட்டிகள் திடீரென தோன்றலாம். மேலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் அவை குறையலாம்.

மேலும் படிக்க | காது கேளாமை... நரம்பு மண்டல பாதிப்பு... இயர்போனை அதிக நேரம் யூஸ் பண்ணாதீங்க!

3. கடினமான, தடித்த தோல்

மருத்துவ ரீதியாக இது டிஜிட்டல் ஸ்களீரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. கடினமான மற்றும் தடிமனான தோல் பொதுவாக விரல்கள், கால்விரல்கள் அல்லது இரண்டிலும் உருவாகிறது. இது உங்கள் கைகளின் பின்புறத்தில் தொடங்கி, கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் காரணமாக முன்கைகள் மற்றும் மேல் கைகளுக்கு முன்னேறலாம். சில சந்தர்ப்பங்களில், இது மார்பு, தோள்கள் மற்றும் முகத்திற்கு பரவுகிறது.

4. தோலில் எற்படும் சிறு வளர்ச்சிகள் 

தோலின் சில சமயம் தோலின் நிறத்திலேயே சிறிய கட்டிகள் போன்ற வளர்ச்சிகள் இருக்கும். அதிக அளவு இரத்த சர்க்கரை அல்லது டைப் -2 நீரிழிவு நோயாளிகளுக்கு தோலில் சிறிய கட்டிகள் தோன்றலாம். அவை ஒரு தண்டில் இருந்து தொங்கும் தோல் திசுக்களின் கொத்து போல இருக்கும். அவை அக்ரோகார்டன் என்றும் அழைக்கப்படுகின்றன.

5. காயம் ஆறுவதில் தாமதம்

நீரிழிவு நோய், உடலில் இன்சுலினை தேவையான அளவு பயன்படுத்த முடியாமல் செய்கிறது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது காயம் குணப்படுத்துவதை மெதுவாக்குகிறது. நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மோசமான இரத்த ஓட்டம் மற்றும் தொற்றுநோய்களுக்கு உங்களை ஆளாக்கும். காயங்களை சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடுவது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே அதைத் தடுக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. பெட்சோர்

பிரஷர் அல்சர் என்றும் அழைக்கப்படும் பெட்சோர்ஸ் தோலில் நீடித்த அழுத்தம் காரணமாக ஏற்படும். அவை பொதுவாக குதிகால், இடுப்பு, டெயில் போன் அல்லது கணுக்கால்களில் உருவாகின்றன. நீரிழிவு நரம்பு சேதம் மற்றும் மோசமான சுழற்சியைத் தூண்டுகிறது. இவை இரண்டும் பிரஷர் அல்சரின் அபாயத்தை அதிகரிக்கும். இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் கவனிக்க வேண்டியது மிக அவசியம். 

7. நீரிழிவு டெர்மோபதி

நீரிழிவு நோயின் மற்றொரு தோல் அறிகுறி நீரிழிவு தொடர்பான டெர்மோபதி ஆகும். இது உங்கள் கால்களின் கீழ் பகுதியில் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தை ஏற்படுத்தும். இந்த தோல் நிலையிலிருந்து விடுபட சிறப்பு சிகிச்சை எதுவும் இல்லை.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 5 உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்கள்! நுரையீரல் பாதிப்புக்கு இவையே காரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News