எப்போதும் அழகா இருக்க சிம்பிள் டிப்ஸ்! முயற்சி செய்தா நீஙகளே எவர்கிரீன் ஹீரோ

80% உணவு 20% உடற்பயிற்சி என்பதே அழகுக்கும் ஆரோக்கியத்திற்குமான தாரக மந்திரம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2022, 08:57 AM IST
  • ஆரோக்கியத்திற்கான அருமருந்து
  • உடற்பயிற்சியும் உணவும்
  • அழகுக்கு அஸ்திவாரமாகும் உணவுகள்
எப்போதும் அழகா இருக்க சிம்பிள் டிப்ஸ்! முயற்சி செய்தா நீஙகளே எவர்கிரீன் ஹீரோ title=

நல்ல உடல் தோற்றத்துடன் இருக்க சிறந்த வழிமுறைகள் என பலவிதமான பரிந்துரைகள் தினசரி உங்களுக்கு கிடைக்கலாம். ஆனால், எல்லாவற்றிலும் முக்கியமான தாரக மந்திரம் இது...

அதிலும், ஓமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் காலத்தில், உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. 80% உணவு 20% உடற்பயிற்சி என்பதே அழகுக்கும் ஆரோக்கியத்திற்குமான தாரக மந்திரம். அதிலும் குறிப்பாக, சருமப்பொலிவுக்கும், உடலின் கழிவுகள் நீங்கவும் அதிக நீர் அருந்தவேண்டும். 

தண்ணீரைவிட வெந்நீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி செரிமானத்த்தை மேம்படுத்தும். சாப்பிட்டதும் பத்து நிமிடம் கழித்து வெந்நீர் அருந்துவதால், உடலில் கெட்ட கொழுப்பு படிவதை தடுக்கும்.

ALSO READ | சிறுதானியங்களின் முடிசூடா மன்னன் கம்பு, நோய்களுக்கு இது தரும் வம்பு

உணவில் காய்கள், கீரைகள், பழக்கள், தானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான நேரப்படி உணவு அருந்துவது நல்லது.

FOOD

பிறகு உடற்பயிற்சி, ஒருவரின் ஆரோக்கியத்திற்கு, தோற்றப் பொலிவுக்கும் அடிப்படையானது. நடை, ஓட்டம், சைக்கிள், பயிற்சிகூடங்களில் உடற்பயிற்சி செய்வது என தினசரி குறைந்தபட்சம் அரை மணிநேரமாவது உடலுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். 

உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதது உடற்பயிற்சி. வயதான காலத்தில் மட்டும்மல்ல எப்பொழுதுமே உடல் நன்றாக இருக்கவும், இயங்கவும், உடற்பயிற்சி, யோகா மற்றும் நடைபயிற்ச்சியை நமது உடல் வாகு மற்றும் வயதுக்கு ஏற்றவாரு தினசரி செய்துவர வேண்டும்.

Also Read | Vitamin D எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் அபாயம் குறையுமா? உண்மை இதுதான்…

Also Read | சூட்டைத் தணிக்க உதவும் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் அற்புதங்கள்

உணவில் ஒரேவிதமான தானியத்தை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்து கம்பு, கேப்பை, கோதுமை, சிகப்பு அரிசி என வெவ்வேறு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

உரிய நேரத்தில் உண்டு, சரியான நேரத்தில் உறங்கினால், உடல் ஆரோக்கியமும்ம், மன ஆரோக்கியமும் மேம்படும். உடலில் பொலிவு கூடிடும், ஆரோக்கியம் பெருகிடும்.

நமது மாறிப்போன உணவுமுறை காரணமாக உடல் சூடு பிரச்சனை அதிகரித்துவிட்டது. தினமும் சிறிது அளவு கம்பு கூழ் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். தவறான உணவு பழக்கங்களின் விளைவாக மலசிக்கல் பிரச்சனை அதிகமாகிவிட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Also Read | கோவிட் ஏற்படாமல் தடுக்கும் கிவி பழத்தின் சூப்பர் நன்மைகள்!

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News