Weight Loss Tips: கோடை காலத்தை விட குளிர்காலத்தில் உடல் எடையை குறைப்பது சற்று கடினம். ஏனெனில் குளிர்காலத்தில் உடல் பயிற்சிகளும் செயல்பாடுகளும் குறைவாக இருக்கும். மேலும் குளிர்காலத்தில் கிடைக்கும் உணவுகளும் விரைவாக எடையை அதிகரிக்கின்றன. ஆகையால் இந்த காலத்தில் உடல் எடையை குறைக்க சிறப்பு முயற்சி எடுக்க வேண்டும். சில எளிய இயற்கையான வழிகளில் குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் சிறந்த வழியாகும். நடைப்பயிற்சி ஒரு சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சி. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, ஒவ்வொரு நாளும் குறைந்தது 8-10 ஆயிரம் படிகள் நடக்க எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். நடைப்பயிற்சி கொலஸ்ட்ரால் (Cholesterol), ரத்த அழுத்தம் (Blood Pressure) மற்றும் சர்க்கரை அளவை (Sugar Level) கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது தவிர, நடைப்பயிற்சி கால் தசைகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைப்பதோடு, நடைப்பயிற்சி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி (Walking For Weight Loss)
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு தினமும் நடைப்பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நடைப்பயிற்சி உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது பிடிவாதமான உடல் கொழுப்பு மற்றும் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து, ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுகிறது. ஆனால் சிலருக்கு காலையில் நடக்க நேரம் கிடைக்கும், சிலருக்கு மாலையில்தான் நேரம் கிடைக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் காலையில் நடப்பது நல்லதா அல்லது மாலையில் நடப்பது நல்லதா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. எந்த நேரத்தில் செய்யப்படும் நடைப்பயிற்சி (Walking) உடல் எடையை வேகமாகக் குறைத்து சிறந்த பலனைத் தரும்? எது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலையா, மாலையா? எப்போது நடந்தால் எடை வேகமாக குறையும்?
உடல் எடையை குறைக்கும் (Weight Loss) போது, நடைப்பயிற்சி சிறந்த பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள பயிற்சியாகும். இது அனைவராலும் செய்யக்கூடியது. எடை இழப்புக்கு நீங்கள் எந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் பேசினால், காலை (Morning Walk) 7 மணி முதல் 9 மணி வரை நடைப்பயிற்சிக்கு நல்லது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆனால், மாலையில் (Evening Walk) நடைப்பயிற்சி செய்வதன் மூலம் குறைவான பலன்கள் கிடைக்கும் என்பது இல்லை. மாலை மற்றும் இரவில் நடைப்பயிற்சி செய்வதன் மூலமும் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எடை இழப்புக்கு, நடைப்பயிற்சி செய்யும் நேரம் மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களும் முக்கியமாகும்.
மேலும் படிக்க | இந்த பழங்களை தோலுடன் சாப்பிட்டால் நீரிழிவு நோயில் நிவாரணம் கிடைக்கும்
எடை இழப்புக்கு எந்த நேரத்தில் நடக்க வேண்டும்?
எடை இழப்புக்கு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், குறைந்த கலோரிகளை (Low Calorie) உட்கொள்வது. நீங்கள் ஒரு நாளைக்கு சுமார் 8-10 ஆயிரம் ஸ்டெப்ஸ் அல்லது தினமும் ஒரு மணிநேரம் நடந்தாலும் உங்கள் எடை குறையவில்லை என்றால், அது அதிக கலோரிகளை உட்கொள்வதால் இருக்கலாம். உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி மூலம் மட்டும் எடையை குறைக்க முடியாது. இதற்கு நீங்கள் பின் வரும் விஷயங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.
- மொத்த தினசரி கலோரி அளவை விட 200-300 கலோரிகள் குறைவாக உட்கொள்ளுதல்
- சத்தான மற்றும் சரிவிகித உணவை உட்கொள்வது.
- உணவில் போதுமான அளவு புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும்.
- இரவில் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.
- சர்க்கரை, இனிப்புகள், தின்பண்டங்கள், சிப்ஸ், குளிர் பானங்கள் மற்றும் பிற துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது குறைக்கப்பட வேண்டும்.
இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், நீங்கள் எந்த நேரத்தில் நடந்தாலும், அது விரைவாக எடையைக் குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாட்டைத் தவிர நாம் செய்யக்கூடிய பிற முயற்சிகளில் நடைப்பயிற்சி மிக முக்கியமான மற்றும் எளிதான ஒரு விஷயமாகும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இறைச்சி, மீனை விட அதிக ஆற்றலை கொடுக்கும் டாப் ‘5’ சைவ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ