Vitamin D Deficiency: நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க பல உணவுகளை சாப்பிடுகிறோம். இல்லையெனில் பல வகையான குறைபாடுகள் ஏற்பட்டு, அதன் காரணமாக பல நோய்கள் ஏற்படலாம். இவை ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் ஆகும். இந்த பதிவில் நம் உடலுக்கு முக்கியமான சத்து 'வைட்டமின் டி' பற்றி காணலாம். வைட்டம்கின் டி குறைபாடு இருந்தால், அது நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்மறையாக பாதிக்கிறது. இதனால் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி குறைகிறது.
வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் தீமைகள்
'வைட்டமின் டி' (Vitamin D Deficiency) குறைபாடு நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது மட்டுமின்றி, எலும்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வைட்டமின்னின் குறைபாட்டால், எலும்புகள் பலவீனமடைய ஆரம்பித்து, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் சோம்பல், சோர்வு, எரிச்சல் போன்றவை ஏற்படும் . சில முக்கிய விசேஷங்களில் கவனம் செலுத்தினால் வைட்டமின் டி குறைபாட்டால் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். வைட்டமின் டி பல உடல் செயல்பாடுகளைச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தக்கவைக்க வைட்டமின் டி உதவுகிறது.
வைட்டமின் டி குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது?
வைட்டமின் டி -ஐ (Vitamin D) போதுமான அளவு பெற, சூரிய ஒளியில் நேரத்தை செலவிட வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில் சூரிய ஒளி நம் உடலில் உள்ள இந்த சிறப்பு ஊட்டச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், நமது உடலுக்கு தினமும் 600 UI வைட்டமின் டி தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். வெயிலில் அமர்வதை தவிர, சில உணவுகளை உட்கொள்வதன் மூலமும் இந்த சத்து கிடைக்கும். வைட்டமின் டி பெறுவதற்கான வழிகளைத் தெரிந்து கொள்வோம்.
1. ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது சூரிய ஒளி நம் உடலில் படும்படி இருக்க வேண்டும். உடலின் பல பாகங்கள் சூரிய ஒளியில் வெளிப்படுவதை உறுதி செய்ய முயற்சி செய்வது நல்லது.
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை குறைக்க வந்துவிட்டது குளிர்கால கீரை! பியூரின் குறைவான பதுவா கீரை
2. சைவ உணவு உண்பவர்கள் பசுவின் பால், ஆரஞ்சு சாறு, முழு தானியங்கள் மற்றும் காளான் சாலட் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால் முட்டையின் மஞ்சள் கரு, சால்மன் மற்றும் டுனா மீன்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. தினமும் ஒரு ஸ்பூன் காட் லிவர் எண்ணெயை உட்கொள்வதால், தினசரி தேவையில் பாதி அளவு வைட்டமின் டி கிடைக்கும்.
5. சைவ உணவு உண்பவர்களுக்கு உணவு விருப்பங்கள் மிகவும் குறைவு. அவர்கள் பாதாம் பால் மற்றும் சோயா பால் உட்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ