Vitamins B12 Nerve Health : நரம்பு என்பது நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இரத்த ஓட்டத்திற்கு இது மிகவும் முக்கியமானது. நரம்புகள் ஆக்ஸிஜன், ஆற்றல் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல முக்கிய கூறுகளை உடல் முழுவதும் எடுத்துச் செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில் நரம்பில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட அவை உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். இதனால் நரம்புகளின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வைட்டமின்கள் உடலுக்கு தேவை. டெல்லி எய்ம்ஸ் நரம்பியல் துறையின் டிஎம் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத் இது தொடர்பான தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அதில் நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க எந்தெந்த வைட்டமின்கள் தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த இரண்டு வைட்டமின்களும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் முக்கியம்
* வைட்டமின் பி12 (Vitamin B12) நரம்புகளை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வைட்டமின் நரம்புகளைச் சுற்றி மைலின் உறை எனப்படும் ஒரு அடுக்கை உருவாக்க உதவுகிறது. நரம்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்த இந்த மெய்லின் உறை அவசியம். உடலில் குறைபாடு இருந்தால் பல வகையான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.
மேலும் படிக்க | High Uric Acid உள்ளவர்கள் இந்த 1 காய்கறியை கட்டாயம் சாப்பிட வேண்டும்
* நமது தினசரி வைட்டமின் பி12 தேவை 2.4 மைக்ரோகிராம் என்பதால், இதன் தேவையை நாம் அசைவ உணவுப் பொருட்களிலிருந்து பூர்த்தி செய்துக் கொள்ளலாம். சைவ உணவு அதன் தேவையை பூர்த்தி செய்ய முடியாது, இருப்பினும், டோஃபு, கீரை மற்றும் காளான்களில் இருந்து வைட்டமின் பி12 சிறிதளவு பெற முடியும்.
* நரம்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் வைட்டமின் ஈ முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து நரம்பு செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. உடலில் வைட்டமின் ஈ (Vitamin E) குறைபாடு நடப்பதில் சிரமம் மற்றும் தலைசுற்றல் போன்றவற்றை ஏற்படலாம். அதேபோல் வைட்டமின் ஈ தாவர எண்ணெயில் நல்ல அளவில் உள்ளது. பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகள் மூலம் அதன் குறைபாட்டை ஈடுசெய்ய முடியும்.
* வைட்டமின் பி9 மற்றும் ஃபோலிக் அமிலம் நரம்புகளை வலுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது சோயாபீன், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பருப்புகளில் நல்ல அளவில் உள்ளது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ