ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!

How To Lose Weight Rapidly : பலருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 8, 2024, 05:35 PM IST
  • ஜிம், வாக்கிங், ஜாக்கிங் வேண்டாம்
  • எடையை மடமடவென குறைக்க டிப்ஸ்
  • என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!  title=

How To Lose Weight Rapidly : உலக அளவில் மக்கள் பலர், உடல் பருமன் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். இதய நோய் கோளாறுகள், உடல் வலி, தசைப்பிடிப்பு, தேவையற்ற நோய் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் வருவதற்கு முழு முதல் காரணமாக இருக்கிறது உடல் பருமன். ஒருவர் உடல் எடை அதிகமாக இருக்க பல காரணங்கள் இருக்கலாம். 

மரபியல் பிரச்சனை, உடல் நல கோளாறுகள், சரியான வாழ்வில் நெறிமுறை இல்லாமல் வெளியிட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஒரு சிலருக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லாமல் இருப்பது கூட காரணம் தான்.  எடையை குறைக்க வேண்டிய பல தினமும் காலையில் வாக்கிங் அல்லது ஜாகிங் செய்ய வேண்டும் என்று நினைப்பர். அப்படி நேரமில்லாதவர்கள் இந்த முயற்சியை செய்து பார்க்கலாம். அது என்ன தெரியுமா? 

படி ஏறுதல்: 

படி ஏறுதல் என்பது HIT உடற்பயிற்சி முறைகளில் ஒன்றாகும். தீவிர உடற்பயிற்சியான இது, க்ளூட்ஸ், கணுக்கால், பின் தொடை சதை உள்ளிட்டவற்றை குறைக்க இந்த உடற்பயிற்சி உதவும். வாக்கிங் அல்லது ஜாக்கிங் செய்கையில், நேராக இருக்கும் தரையில் செய்வோம். ஆனால் படி ஏறுகையில் புவியீர்ப்பு விசைக்கு எதிர்மறையாக ஏறுகிறோம். இதனால், நமது இதயத்துடிப்பு அதிகரித்து வெகுவிரைவில் கலோரிகள் அதிகமாக குறையும். இது, எடையை சீக்கிரம் குறைக்கவும் உதவுகிறது.  ஒரு நிமிடம் படியேறினால் 8 முதல் 11 கல்லூரிகள் குறைவதாக அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த உடற்பயிற்சியை ஜிம்மிற்கு செல்லாமல் நாம் செய்யலாம். 

கலோரி Deficit:

உடல் எடையை குறைப்பதற்கு கலோரி Deficit முக்கியமான காரணமாக இருக்கிறது. நாம் சாப்பிடும் கலோரிகளை விட எரிக்கும் கலோரிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே இதற்கு அர்த்தம். உதாரணத்திற்கு 70 கிலோ எடை கொண்ட ஒருவர் 20 நிமிடங்கள் படி ஏறினால் 200 கருவிகள் குறையும் என்று கூறப்படுகிறது. எனவே உடல் எடையை வேகமாக குறைக்க விரும்புபவர்கள் படி ஏறுதல் டெக்னிக்கை பின்பற்றலாம். 

Stair Climbing

மேலும் படிக்க | Weight Loss Challenge: ஒரு மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்க தயாரா..!!

எப்படி செய்ய வேண்டும்?

எந்த உடற்பயிற்சியை செய்வதற்கு முன்னரும் நாம் அதற்கான சரியான முன்னிருப்புகளை எடுத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். அப்படி, படி ஏறுவதற்கு முன்னர் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வார்ம் அப்:
நின்ற இடத்திலேயே ஓடுவது அல்லது சிறிது நேரம் நடப்பது போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். நாம் படி இருகையில் மொத்த காலையும் உபயோகித்து ஏற வேண்டும். நுனிக்கால் அல்லது பின்னங்காலை மட்டும் உபயோகிக்க கூடாது. 

தோரணை: 
குனிந்து கொண்டு படி ஏறுதல் அல்லது இறங்குதல் கூடாது. நீராக நிமிர்ந்து படியேறும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்..

மெதுவாக ஆரம்பிக்கவும்..
எந்த உடற்பயிற்சியையும் எடுத்தவுடன் வேகமாக செய்யக்கூடாது. மெதுவாக முதலில் படி ஏற ஆரம்பிக்க வேண்டும்.  படியேறி முடித்தவுடன் உங்கள் தசைகள் மற்றும் தசைப்பிடிப்புகள் நீங்க சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்ய வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | Weight Loss Tips: மூன்றே நாளில் 1 கிலோ எடை குறையணுமா... ‘இதை’ செய்யுங்க போதும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News