மூட்டு வலி என்பது பொதுவாக எலும்புகளின் தேய்மானத்தால் ஏற்படுவதாகும். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கு கூட மூட்டுவலி வருகிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் மூட்டுவலிகள் அதிகரிப்பதற்கும் சில பிரத்யேகமான காரணங்கள் உள்ளன. அவற்றை தெரிந்துகொண்டால் மூட்டு வலி ஏற்படுவதை தடுக்கலாம் அல்லது உரிய நிவாரணம் பெறலாம்.
மூட்டு வலி குளிர்காலத்தில் அதிகரிக்கும் ஒரு பிரச்சனையாகும். மருத்துவர்களின் கூற்றுப்படி, வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக மூட்டுகளைச் சுற்றியுள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கங்கள் மூட்டில் வலியை ஏற்படுத்துகிறது.
ALSO READ | உண்மையில் உடலுறவு மன அழுத்தத்தைக் குறைக்குமா? - நிபுணர் கூறுவது என்ன?
குளிர்காலத்தில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும். இதனால், உடலின் இயக்கத்திலும் மாற்றம் ஏற்படுவதால் சில ஆரோக்கியமான விஷயங்களை இந்த காலத்தில் நாம் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். உடலை சூடாக வைத்திருக்க வேண்டும். இதனால் மூட்டுவலி மட்டுமல்லாது மற்ற பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
குளிர்காலத்துக்கான உடைகளை அணிவது கட்டாயமாகும். அப்போதுதான், உடலில் இருக்கும் வெப்பம் வெளியேறாது. மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் பராஃபின் மெழுகு அல்லது ஹீட்டிங் பேட் ஆகியவற்றை வலி இருக்கும் பகுதியில் வைக்கலாம்.
குளிர்காலத்தில் ஏற்படும் விறைப்பை தடுக்க வைட்டமின் டி ஊட்டச்சத்து இருக்க வேண்டும். சூரிய ஒளியில் வைட்டமின் டி கிடைக்கும் என்பதால் நாள்தோறும் காலையில் சூரிய ஒளியில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடலாம்.
ALSO READ | Dry hair: குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போய்விட்டதா? இதோ Tips
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR