கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரான், இதுவரை பலரை பாதித்துள்ளது. முந்தைய மாறுபாடுகளைவிட மிக வேகமாக பரவி வருகிறது. நீங்களும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்தால், எந்த பழங்களை சாப்பிட வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1. திராட்சை
திராட்சையை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஊறவைத்து உட்கொண்டால், இன்னும் நல்லது. அது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க வேண்டும் என விரும்புபவர்கள், தொற்றுநோயில் இருந்து மீள வேண்டும் அல்லது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் திராட்சை சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
ALSO READ | Food vs Omicron: ஓமிக்ரானை ஓட ஓட விரட்டும் உணவுகள்!
2. மாதுளை
மாதுளையை தினசரி சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. குடல் இயக்கத்தை சீராக்குவதுடன், மலச்சிக்கலை போக்குகிறது. குடல் மற்றும் சீறுநீரக பாதைளை சுத்தம் செய்யும் மாதுளை, உடலில் ரத்தத்தை அதிகரிக்கும். ரத்தம் உடல் முழுவதும் சீராக செல்வதற்கு மாதுளையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் செயலாற்றும்.
3. துளசி
துளசி இயற்கை மருத்துவத்திலேயே கிருமி நாசினியாகவும், நோய் நீக்கியாகவும் பயன்படுத்தப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும், தொற்றுநோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் தினமும் குறிப்பிட்ட அளவிலான துளசியை தாராளமாக சாப்பிடலாம். துளசியில் டீ வைத்து குடிக்கலாம். இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். துளசியுடன் சிறிது மஞ்சள் அல்லது பூண்டு சேர்த்தும் சாப்பிடலாம்.
ALSO READ | Sugar: சுவையானதெல்லாம் ஆரோக்கியமானதா? இனிக்கும் சர்க்கரையின் கசப்பான மறுபக்கம்
4. வாழைப்பழம்
உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் அதிகம் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வார்கள். ஆனால், அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் அம்சமும் இருக்கிறது. வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள், ஆன்டி பாக்டீரியல் பண்கள் இருப்பதால், தொற்றுநோய்களை எதிர்த்து போராடுவதற்கு உடலை தயார்படுத்த உதவும். ஒமிக்ரான் உள்ளிட்ட தொற்று நோய் பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள், நோய் வரக்கூடாது என நினைப்பவர்கள், இதுபோன்ற ஆரோக்கியமான உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR