கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகுப் பொருளாகும், இது இரத்தத்தில் உருவாகி தமனிகளில் சேரத் தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, தமனிகளின் இரத்த ஓட்டம் தடைபடத் தொடங்கி சீர் குலைகிறது, ரத்த ஓட்டம் சீர் கெட்டுப் போவதால் பல வகையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. அதிக கொலஸ்ட்ரால் காரணமாக உடலில் காணப்படும் அறிகுறிகள் தோன்றினால், அதை உடனடியாக கவனம் கொடுத்து பார்த்துக் கொண்டால், அதை சீர் செய்துவிடலாம். கொலஸ்ட்ராலை சீராக்க, முறையான உணவு பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். தவறாமல் உடற்பயிற்சிகளை செய்துவர வேண்டும்.
அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்
நெஞ்சு வலி
இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேர்ந்திருந்தால், நெஞ்சுவலி பிரச்னை வரலாம். இதன் காரணமாக, சில நேரங்களில் மார்பில் வலியை உணரலாம் அல்லது அவ்வப்போது மார்பில் பாரமான உணர்வு ஏற்படும். .
மேலும் படிக்க | Health Alert: இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்!
கால் வலி
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, கால்களின் தமனிகளுக்கு இரத்த ஓட்டம் தடைபடும். இதனால் கால்களுக்கு ரத்தம் சரியாக வராமல் நடப்பதில் சிரமம் ஏற்படும். அதோடு, பாதங்களில் வலி, பாதத்தின் தோலின் நிறம் மாறுவது என பல அறிகுறிகள் தோன்றும். இது தவிர, பாதங்களின் வெப்பம் குறைந்து, குளிர்ந்து போய் காணப்படும்.
இதய வலி
உடலின் பிற பகுதிகளில் ஏற்படும் அசாதாரன நிலைமையுடன், இதயத்தில் வலியும் கொலஸ்ட்ரால் அதிகரித்ததற்கான அறிகுறியாகும். அதிகப்படியான கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கும் வழிவகுக்கும்.
மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!
யாருக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்?
உணவில் போதுமான ஊட்டச்சத்துக்களை சேர்த்துக் கொள்ளாதவர்கள் மற்றும் ஜங்க் ஃபுட் அதிகம் உண்பவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை காணப்படுகிறது
பதப்படுத்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொள்வதும் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதற்கு காரணமாக இருக்கிறது
எந்த விதமான உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதும், உடல் பருமனாக இருப்பதும் கொலஸ்ட்ரால் இருப்பதற்கான காரணமாகிறது
புகைபிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ