ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களுக்கான தேவைகள் மட்டுமல்ல, அழகு சாதன் பொருட்களுக்கான தேவைகளும் தற்போது அதிகமாகிக் கொண்டே செல்கின்ரான. ஆனால், அவற்றில் பல வேதியல் பொருட்கள் கலந்திருக்கின்றன. சல்பேட்டுகள் மற்றும் பாரபென்கள் கொண்ட தயாரிப்புகளை நீங்கள் ஏன் தவிர்க்க வேண்டும்? என்பதை தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.
அழகுக்கு அழகு சேர்க்கும் பொருட்கள் ஆபத்தையும் கொண்டுள்ளது. மாறி வரும் காலகட்டத்தில், இயற்கையை விட்டு, செயற்கையான கெமிக்கல்கள் கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால், ஒருபோதும் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உணவு மற்றும் அழகுத் தொழில்களில் பாரபென்கள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
சல்பேட்டுகள் & சர்பாக்டான்ட்கள்
அனைத்து வகையான சோப்பு சுத்திகரிப்பு பொருட்களிலும் அவை இருப்பதால் அவை பெரும்பாலும் வீட்டு சுத்தம் செய்யும் பொருட்களில் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகளாகும், மேலும் அவை எண்ணெய் மற்றும் அசுத்தத்தை போக்குபவை. ஆனால், பல்வேறு தோல் பராமரிப்புப் பொருட்களில் சல்பேட் பராபென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அதுபோன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
தோல் பராமரிப்புப் பொருட்களில் சல்பேட் ஒரு பொதுவான மூலப்பொருளாக இருக்கின்றன. உண்மையில், சல்பேட்கள் சருமத்தின் இயற்கையான எண்ணெயை அகற்றி, சருமத்தை மிகவும் வறண்டு போகச் செய்கிறது.
பாரபென்கள் பயன்பாடும் ஆபத்தும்
பராபென்கள் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கலாம், புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்பதோடு, தோல் பிரச்சனைகளை மேலும் மோசமாக்கலாம் என்று பல ஆண்டுகளாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. கூடுதலாக, பாரபென்கள் தோலின் மேல் அடுக்கில் ஒட்டிக்கொள்வதால், புற ஊதா கதிர்களால் பாரபென்கள் பாதிக்கப்படுவதன் விளைவையும் சருமம் எதிர்கொள்கிறது.
பராபென் உள்ள பொருட்கள்
லோஷன்கள், சன்ஸ்கிரீன், டியோடரண்டுகள் மற்றும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போன்ற முடி பராமரிப்பு பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களில் பாராபென்கள் காணப்படுகின்றன.
ஒப்பனை மூலப்பொருள் லேபிள்கள்
நீங்கள் வாங்கும் ஒப்பனைப் பொருட்களின் லேபிள்களில், ப்யூட்டில்பரபென், மெத்தில்பராபென், ப்ரோபில்பரபென், எதில்பரபென் மற்றும் ஐசோபிரோபில்பரபென் என குறிப்பிட்டிருந்தால், அந்தப் பொருட்களில் பராபென்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பொருள்.
மேலும் படிக்க | வேகமாக பரவும் H3N2: இந்த மாநிலத்தில் முதல் மரணம் பதிவு, பீதியில் மக்கள்
சல்பேட்டுகள் மற்றும் பாரபென்கள் கொண்ட தயாரிப்புகளை நீங்கள் ஏன் தவிர்க்க வேண்டும்?
சல்பேட்டுகள் மற்றும் பாரபென் கொண்ட பொருட்கள் உங்கள் தலைமுடியில் இருந்து எண்ணெய் பிசுக்கை அகற்ற உதவும், ஆனால் அவை, தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய்களையும் நீக்குகின்றன. இதன் விளைவாக, முடி வறண்டு சேதமடைகிறது.
இயற்கை PH நிலைத்தன்மை
சல்பேட் இல்லாத மற்றும் பாராபென் இல்லாத சருமப் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தினால், தோலில் உள்ள இயற்கையான pH நிலைத்தன்மை நீடிக்கும்.
சூழலியல் சம்பந்தப்பட்டது
சல்பேட்டுகளும் பாரபென்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அல்ல, ஏனென்றால் அவை தண்ணீரிலும் அமிலமயமாக்குகின்றன. சல்பேட்டுகளின் எதிர்மறையான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு அழகுசாதனத் துறையில் அதிகரித்து வருவதால் சல்பேட் பயன்பாடு குறைந்து வருகிறது. குறிப்பாக பாடி வாஷ் மற்றும் ஷாம்பூக்களில் இவற்றின் பயன்பாடு குறைவாகிவிட்டது.
மேலும் படிக்க | அரசாங்கத்திற்கு பதற்றத்தை அதிகரித்த H3N2! மக்களுக்கு மிகுந்த எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ