மார்பக புற்றுநோய்க்கு காரணமாகும் உணவு பொட்டலங்கள்... பகீர் ரிபோர்ட்

பிளாஸ்டிக், காகிதம், உலோகம் ஆகியவற்றினால் செய்த கலன்கள் உணவுகளை பேக்கேஜ் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 25, 2024, 03:05 PM IST
  • மார்பக புற்றுநோய் ஆபத்தை உண்டாக்கும் ராசாயனக்கள் குறித்த ஆய்வறிக்கை.
  • உணவு பேகேஜ் பொருட்களில் மார்பகப் புற்றுநோய்களை ஏற்படுத்து, 76 வகை ரசாயனங்கள் இருப்பதை கண்டறிந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
  • உலகளவில் 2.3 மில்லியன் (23 கோடி) பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்பக புற்றுநோய்க்கு காரணமாகும் உணவு பொட்டலங்கள்... பகீர் ரிபோர்ட் title=

பிளாஸ்டிக், காகிதம், உலோகம் ஆகியவற்றினால் செய்த கலன்கள் உணவுகளை பேக்கேஜ் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சமீபத்திய அதிர்ச்சியூட்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சியில், நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட உணவுப் பொட்டலங்கள், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு காரணமாகி வருவது தெரிய வந்துள்ளது. 

நமது வசதிக்காக அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொட்டலங்கள், தற்போது கடுமையான உடல்நலப் பாதிப்பாக உருவெடுத்து வருகின்றன. பிளாஸ்டிக், காகிதம் மற்றும் அட்டை, அலுமினியம் பாயில் உள்ளிட்ட உணவு பேக்கேஜிங் பொருட்களில் மார்பக புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் சுமார் 200 ரசாயனங்கள் இருப்பதாக ஒரு ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. அன்றாட பயன்பாட்டில் உள்ள உனவு பேக்கிங் பொருட்களில் உள்ள இந்த இரசாயனங்களைக் குறைக்க வலுவான தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை 'Frontiers in Toxicology' என்ற ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

உங்கள் அன்றாட வாழ்க்கையில் அபாயகரமான இரசாயனங்களின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் புற்றுநோயைத் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் அவசியம் ஏற்பட்டுள்ளது என கூறிய உணவு பேக்கேஜ் மன்றத்தின் நிர்வாக இயக்குநரும், ஆய்வின் இணை ஆசிரியருமான ஜாம் முன்கே (Jan Muncke), மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் மனைதர்கள் உடலில் கலக்காமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டும் இந்த ஆய்வு முக்கியமானது (Health Tips) என்றார். 

மார்பக புற்றுநோய் உலகளவில் அதிக அளவில் பாதிக்கப்படும் இரண்டாவது புற்றுநோயாகும். பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 2.3 மில்லியன் (23 லட்சம்) பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த காலகட்டத்தில் 6,70,000 பேர் இறந்துள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) கூறுகிறது. மார்பக புற்றுநோய் ஆபத்தை உண்டாக்கும் ராசாயனக்கள் குறித்து ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பேக்கேஜ்களில் உள்ள 143 வகை ரசாயனக்கள் மற்றும் காகிதம் அல்லது அட்டை வகை பேக்கேஜ்களில் 89 ரசாயனங்கள் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | Brain Health: மூளை மந்தமாக்கும்.... இந்த ஆபத்தான பழக்கங்கள் வேண்டாமே...

 2020-2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகெங்கிலும் வாங்கப்பட்ட உணவு பேகேஜ் பொருட்களிலிருந்து மார்பகப் புற்றுநோய்களை ஏற்படுத்து, 76 வகை ரசாயனங்கள் இருப்பதை கண்டறிந்தனர், அவற்றில் 61 (80 சதவீதம்) பிளாஸ்டிக்கிலிருந்து வந்தவை. முக்கியமாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட இடங்களில் உள்ள சந்தைகளில் இருந்து வாங்கப்பட்டவை இவை பல ஆண்டுகளாக வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க உணவுப்பொருட்களை கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் அவற்றை பொட்டலங்களில் இருந்து பிரித்தெடுத்து வீட்டில் உபயோகிக்கும் பாத்திரங்களுக்கு மாற்றுவது உகந்தது. முக்கியமாக பிளாஸ்டில், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் வாங்கி வந்த உணவு பண்டங்களை அப்படியே சூடேற்றி உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் வெளியான மற்றொரு ஆய்வில், உணவு பொருட்களை பேக்கேஜ் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் மூலம் 3,601 விதமான ரசாயனங்கள் உணவு வழியாக மனித உடலில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் உள்ள உணவு பேக்கேஜிங் கூட்டமைப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிர்கிட் கியூக்கி கூறுகையில், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு பண்டங்களை பேகேஜ் செய்ய தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் குடுவைகளில் உள்ள பிஸ்ஃபெனால் ஏ உள்ளிட்ட ஆபத்தான பல ரசாயனங்கள் மனித உடலில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை எரிக்கும் ராகி... சில சுவையான ரெஸிபிகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News