சுகர் ஃப்ரீ மாத்திரை சாப்பிடும் பழக்கம் இருக்கா... இன்னைக்கே நிறுத்திடுங்க..!

Side Effects of Articial Sweetners: சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ மாத்திரைகள், ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை அளிக்கும் என்ற எண்ணம் பலர் மனதில் உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 25, 2024, 07:23 PM IST
  • சுகர் ஃப்ரீ மாத்திரைகள், ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை அளிக்கும் என்ற எண்ணம் பலர் மனதில் உள்ளது.
  • செயற்கை இனிப்புகள், கலோரி அளவில் குறைவாக இருந்தாலும், பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
  • உடல் பருமனுக்கு காரணமாகும் சுகர் ஃப்ரீ மாத்திரைகள்.
சுகர் ஃப்ரீ மாத்திரை சாப்பிடும் பழக்கம் இருக்கா... இன்னைக்கே நிறுத்திடுங்க..! title=

Side Effects of Articial Sweetners or Sugarfree Tablets: இன்றைய காலகட்டத்தில், ஒருபுறம் துரித உணவுகளை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், போதிய மருத்துவ அறிவு இல்லாததன் காரணமாக, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நினைத்து நாம் செய்யும் பல தவறுகள், ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். அதில் ஒன்றுதான் சுகர் ஃப்ரீ மாத்திரைகள்.

சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ மாத்திரைகள், ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை அளிக்கும் என்ற எண்ணம் பலர் மனதில் உள்ளது. சர்க்கரையினால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க, மிகக் குறைந்த கலோரி கொண்ட சுகர் ஃப்ரீ மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம், நீரழிவு நோயாளிகள் இடையே மட்டுமல்ல, உடல் எடையை குறைக்க, குறைந்த கலோரி உணவை தேர்ந்தெடுக்கும் ஆர்வம் கொண்ட பலருக்கும் உள்ளது.

ஆனால் செயற்கை இனிப்புகள், கலோரி அளவில் குறைவாக இருந்தாலும், பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை. ராசா இனங்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, கல்லீரலை பாதிப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் பருமனுக்கு காரணமாகும் சுகர் ஃப்ரீ மாத்திரைகள்

சுகர் ஃப்ரீ மாத்திரை அல்லது செயற்கை இனிப்புகளை கலோரிகள் குறைவாக இருக்கும் நிலையில், அவை பசியை தூண்டி உடல் பருமன் பிரச்சனையை அதிகரிக்கும். மேலும் இது வளர்ச்சியை மாற்றத்தையும் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க | இதமளிக்கும் இளநீர்: சுவை, ஆரோக்கியம், நோய்களிலிருந்து நிவாரணம் தரும் சூப்பர் ட்ரிங்க்!!

உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் செயற்கை இனிப்புகள்

சுகர் ஃப்ரீ மாத்திரை ஆரோக்கியத்திற்கு கடும் தீங்கு விளைவிக்கும். செயற்கை இனிப்பு அல்லது சுகற்பை சேர்க்கப்பட்ட பானங்களை இரண்டு முறைக்கு மேல் அருந்துவதால் உயர் ரத்த அழுத்த அபாயம் அதிகரித்து, இதய நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

செரிமான பிரச்சினைகள்

செயற்கை இனிப்புகள் செரிமானத்தை பாதிக்கும் பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தி, செரிமான ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்.  இதனால், வயிற்றில் வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

மிதமான அளவு செயற்கை இனிப்புகளை உட்கொள்வது பெரிய அளவில் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், இந்த செயற்கை இனிப்புகளை அதிக அளவில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும், குறிப்பாக உடல் நல பிரச்சனைகள் அல்லது ஏதேனும் நோய் பாதிப்பு உள்ளவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்வது மிகவும் தவறு அதே போன்று கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் இதனை தவிர்ப்பது சிறந்தது.

செயற்கை இனிப்புகள் இயற்கையாக கிடைக்கும் பொருள் அல்ல என்பதை மனதில் கொள்வது நல்லது. இவை வேதியியல் ரீதியாக உருவாக்கப்படும் பொருள். அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாக்கரின் ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு வகைகள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News