Hair Growth: ‘இது புதுசா இருக்கே..’ தினமும் உடற்பயிற்சி செய்தால் நன்கு முடி வளருமா?

உடற்பயிற்சி மேற்கொள்வதனால் நமது தலை முடி வளரும் என சில மருத்துவம் குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.  

Written by - Yuvashree | Last Updated : May 6, 2023, 02:31 PM IST
  • உடற்பயிற்சி செய்வதால் மனநலத்திற்கும் உடல் நலத்திற்கும் நன்மை.
  • முடி வளர்க்க உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் ஒரு சில பயிற்சிகளை செய்யக்கூடாது.
  • சில ஆரோக்கிய உணவு பழக்கங்களும் முடி வளர உதவும்
Hair Growth: ‘இது புதுசா இருக்கே..’ தினமும் உடற்பயிற்சி செய்தால் நன்கு முடி வளருமா? title=

தினமும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது, உடலையும் மனதையும் திடமாக வைத்திருக்க உதவும். காலையில் செய்யும் உடற்பயிற்சிகள் உடல் எடையை குறைக்க உதவும் என பலருக்கு தெரியும். ஆனால், முடி வளர்வதற்கும் அவை உதவி புரிகின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 

திடமான உடல்-அடர்த்தியான கூந்தல்:

முடி வளர பலர் எண்ணெய் தேய்ப்பதிலிருந்து ஹேர் மாஸ்க் போடுவது வரை பல ஜித்து வேலைகளை செய்கின்றனர். அவர்களின் அந்த ஹேர் கேர் ரொட்டீனில் சில உடற்பயிற்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம் என சில உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உடற்பயிற்சி மனவளத்துக்கும் உடல்வளத்துக்கும் நன்மை புரிந்தாலும் அது நமது முடி வளத்திற்கும் சிறந்ததாம். மொத்தத்தில் உடற்பயிற்சி செய்தால், “ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

மேலும் படிக்க | Summer Tips: வெயில் காலத்தில் கண்டிப்பாக இந்த உணவுகளை தொடாதீங்க!

இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்:

உடற் பயிற்சி செய்கையும் நமது இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடலில் உள்ள இரத்த செல்களின் ஆக்ஸிஜன் அளவையும் அதிகரிக்கும். இது, முடி வளர முக்கிய காரணமாக உள்ளது. முடியின் வேர்பகுதியில் உள்ள நுண்ணறை பகுதி எனக்கூறப்படும் ட்யூப் வடிவ துளைகளை பெரிதாக உதவுகிறது. இந்த துளையில் இருந்துதான் முடி வளருமாம். இவ்வாறு தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால், முடி அதிகமாக வளர வாய்ப்பு உள்ளதாம். 

மன அழுத்தத்தை குறைக்கிறது:

எந்த வகையான உடற்பயிற்சி செய்தாலும், அது உங்கள் மன அழுத்தங்களை போக்க உதவும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இவ்வாறு மன அழுத்தங்கள் நீங்குவதால் என்டார்ஃபைன்ஸ் எனப்படும் அமிலங்கள் சுரக்கும். இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். இதனால், மன அழுத்தத்தால் ஏற்படும் முடி உதிர்வு குறையும். அது மட்டுமன்றி, உங்கள் முடி உதிராமல் அடர்த்தியாக இருக்கவும் இது உதவுகிறது. 

எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? 

மருத்துவ நிபுணர்கள் பலர், எல்லா வகையான உடற்பயிற்சியும் முடி வளர்வதற்கு உதவும் என தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஏரோபிக் மற்றும் கார்டியோ வகை உடற்பயிற்சிகள் முடிக்கு அதிக நன்மை பயப்பதாக தெரிவிக்கின்றனர். இது ஹைபர்ட்ராஃபி எனப்படும் முடிவளரும் முறை என கூறப்படுகிறது. இந்த வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால், முடி வளரும் தசைகளை உறுதியாக்கி முடி உதிர்வை குறைக்கிறதாம். 

இந்த உடற்பயிற்சிகளை செய்யாதீங்க!

முடி வளர்வதற்காக உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் கண்டிப்பாக ஒரு சில உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என சில மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டு சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளை முடி வளர்க்க நினைப்போர் தவிர்க்க வேண்டுமாம். இது அதிக தசைகளை உள்ளடக்கிய உடற்பயிற்சி என்பதால் இவை முடி வளர உதவாதாம். ஸ்க்வாட் எனப்படும் உடற்பயிற்சி, கால்களை எதிர் திசையில் வைத்து செய்யும் லஞ்சஸ் எனும் உடற்பயிற்சி ஆகியவை இந்த லிஸ்டில் அடங்கும்.

முடி வளர்வதற்கு உதவும் ஹெல்தி உணவுகள்:

உடற்பயிற்சிகள் மட்டுமன்றி, சில ஆரோக்கியமான உணவு வகைகளும் முடி வளர்வதற்கு காரணமாக அமைகின்றன. வைட்டமின் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் முடிக்கு மிகவும் முக்கியம. முட்டை, காய்கறிகள், நடஸ் வகைகள் ஆகியவை அந்த ஆரோக்கிய உணவு பட்டியலில் அடங்கும். 

மேலும் படிக்க | இரவில் தயிர் சாப்பிடலாமா? வேண்டாமா? மருத்துவ நிபுணர்கள் கூறுவது இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News