சர்க்கரை அளவு அதிகமா இருக்கா: இந்த காய்கள் இருக்கும் போது கவலை எதுக்கு

நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க விரும்பினால் அதற்கு உணவு கட்டுப்பாடும் முக்கியமானதாக இருக்கிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 8, 2022, 07:45 PM IST
  • சர்க்கரை அளவை குறைக்கும் காய்கள்
  • நீரிழிவுக்கு சவால் விடும் காய்கள்
  • வாழைக்காயின் அற்புதம்
சர்க்கரை அளவு அதிகமா இருக்கா: இந்த காய்கள் இருக்கும் போது கவலை எதுக்கு title=

நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க விரும்பினால் அதற்கு உணவு கட்டுப்பாடும் முக்கியமானதாக இருக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் இந்த 5 பொருட்களைக் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். 

நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் சீரான மற்றும் மிதமான உணவை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பொதுவாக நெல்லிக்காய், பாகற்காய் போன்ற காய்களும் கனிகளும் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், இவற்றைத் தவிர பலருக்கும் தெரியாத சில காய்கனிகள் ரத்த சர்க்கரையை, அதுவும் உணவு உண்பதற்கு முன்னதான சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

இந்த உணவுகள் சுவையானதாக இருப்பதால் விரும்பி சாப்பிடலாம்.  

மேலும் படிக்க | தயிரால் பளபளக்கும் தலைமுடி: இது சூப்பர் அழகு டெக்னிக்

பாகற்காய் 
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் நன்மை பயக்கும். உண்மையில் இது நீரிழிவு நோய் உள்ளவர்களின் உணவுக்கு முந்தைய இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க நல்ல காய் என்று கூறப்படுகிறது.

பாவக்காய் செரிமாணம் ஆவதும் மிகவும் எளிதானது, இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் பாகற்காயை  வேகவைத்துக் கொள்ளவும். உப்பு, வெங்காயம், கொத்தமல்லி இலைகள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைக் கலக்கவும். இப்போது எல்லாவற்றையும் நன்றாக மசித்து சாப்பிடவும். இது மிகவும் ஆரோக்கியமான பதார்த்தமாகும்.

நாவற்பழம்

சர்க்கரை நோய்க்கான பழம் நாவற்பழம். குக்கரில் நாவற்பழத்தை போட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு, நாவல்பழத்திலுள்ள விதைகளை எடுத்துவிட்டு, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து சட்னியாக எடுத்துக் கொள்ளலாம். இது உணவுக்கு முந்தைய சர்க்கரை அளவைக் குறைக்கும்.

health

நெல்லிக்காய் 

நீரிழிவு நோயாளிகளுக்கு நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் குரோமியம் இதில் உள்ளது. இதன் காரணமாக, கார்போஹைட்ரேட்டுகள் விரைவாக ஜீரணமாகின்றன மற்றும் இரத்த சர்க்கரை அதிகரிக்காது.

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் சில ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. நெல்லிக்காயை வேகவைத்து வைத்துக் கொண்டு, அதிலுள்ள விதைகளை எடுத்துவிட்டு சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு கலந்து சாப்பிடவும். இரவில் இப்படி வேகவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால், காலையில் இரத்த சர்க்கரை அளவும் சீராக இருக்கும்.

முருங்கைக்காய் 
சர்க்கரை நோய்க்கு முருங்கைக்காய் நல்லது. முருங்கைக்காயை வேகவைத்து அதிலுள்ள சதைப்பகுதியை மட்டும் எடுத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. வேண்டுமானாலும் முருங்கைக்காயின் ஊனுடன் (சதைப்பகுதியுடன்) பாசிப்பருப்பை சேர்த்து கூட்டாக சமைத்தும் சாப்பிடலாம். இது, சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, வளர்சிதை மாற்றத்தையும் பராமரிக்கிறது.  

health

வாழைக்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைக்காய் மிகவும் நன்மை பயக்கும். வாழைப்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும், ஆனால் வாழைக்காயில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக உள்ளது. இதிலுள்ள கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) 55 க்கும் குறைவாக உள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

குறைந்த ஜிஐ உணவுகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிப்பதைத் தடுக்கின்றன. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வாழைக்காயை நறுக்கி வேகவைத்து பொரியலாக செய்து உணவில் சேர்த்துக் கொள்ளவும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News