பக்காவா எடையை குறைக்கும் பனீர்: சூப்பரா தொப்பையை குறைக்க இப்படி சுவையா சாப்பிடுங்க

Weight Loss Tips: புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய பனீரில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடலாம். இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாக உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 25, 2023, 06:54 AM IST
  • உடல் பருமன் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவுதான்.
  • எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது.
  • நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்கலாம்.
பக்காவா எடையை குறைக்கும் பனீர்: சூப்பரா தொப்பையை குறைக்க இப்படி சுவையா சாப்பிடுங்க title=

Weight Loss Tips: நம்மில் பலர் உடல் பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். இதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவுதான். எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உணவின் அளவை குறைத்தால், உடல் எடை வேகமாக குறையும் என்று நினைக்கிறோம். ஆனால், உணவை குறைப்பதால் உடல் எடை குறையாது, மாறாக நமது உடலின் ஆற்றலில்தான் பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட சில ருசியான உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

எடை இழப்புக்கு பனீர் (Paneer For Weight Loss):

பனீர் மிகவும் விரும்பப்படும் ஒரு பால் தயாரிப்பு ஆகும். உடற்தகுதியில் கவனம் செலுத்தும் சைவ உணவு உண்பவர்கள் உடலில் உள்ள புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய பனீரில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுகிறார்கள். இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாக உள்ளது. இது மட்டுமல்லாமல் பனீர் எடை குறைப்பதிலும் (Weight Loss) முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள புரதத்தில் உள்ள கலோரிகளின் அளவு காரணமாக, இதை உட்கொண்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். மேலும் கொழுப்பும் இதனால் வேகமாக எரிகிறது. ஆகையால் தொப்பை கொழுப்பை குறைக்கவும் இது உதவும். எனினும், எடை இழப்புக்காக பாலாடைக்கட்டியை உட்கொள்ளும்போது, இதை சாப்பிடுவதற்கும் சமையல் செய்வதற்கும் சரியான முறையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த 9 வழிகளில் பனீரை சாப்பிடுங்கள்

பச்சை பனீர் 

சமைத்த பனீரைப் போலவே பச்சை பனீரும் மிக சுவையாக இருக்கும். இது மென்மையானது, இதன் மேலே சிறிது உப்பு மற்றும், தேவைப்பட்டால் மிளகு பொடி தூவி உட்கொண்டு மகிழலாம். எடை இழப்புக்கு, சாலட்டில் பச்சையாக இதை உட்கொள்ளலாம். 

பன்னீர் புர்ஜி

பனீரை ரொட்டி அல்லது சாதத்துடன் சாப்பிட விரும்புபவர்கள், வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு ஆகியவற்றை வதக்கி, அதில் எண்ணெயில் வதக்கிய பனீரைச் சேர்க்கவும். பன்னீர் புர்ஜி உடல் எடையை குறைக்கும் ஆரோக்கியமான உணவாக உள்ளது.

கிரில் செய்து சாப்பிடலாம்

பனீரை கரகரப்பாக செய்வதற்கும் வறுத்தெடுக்கவும், அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். இதற்குப் பதிலாக ஆலிவ் எண்ணெயில் சீஸைப் பொரித்து சாப்பிடலாம். எடை இழப்புக்கு இதுவும் ஒரு சிறந்த முறையாகும்.

பனீர் டிக்கா

கிட்டத்தட்ட அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு வகை பனீர் (Paneer) டிக்கா. இது, பனீரை தயிர் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்து, தந்தூரின் உள்ளே குடைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து சமைக்கப்படுகிறது. இது எண்ணெய் பயன்படுத்தாமல் சமைக்கபப்டுகின்றது. இந்த வழியில் பனீர் உட்கொள்வது எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை ... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

பாலக் பனீர்

இது பொதுவாக மதிய உணவில் சைட் டிஷ்ஷாக ரொட்டியுடன் சாப்பிடப்படுகிறது. இதில் உள்ள இரும்பு மற்றும் மெக்னீசியம், பனீருடன் இணைந்தால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாக இது இருக்கும்.

வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத பனீர் ரெசிபி

நீங்கள் வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் பிடிக்காத நபராக இருந்தால், அதற்கு பனீரின் பல ரெசிபிகள் உள்ளன. அவை இல்லாமல் பனீரை சுவையாக சமைக்கலாம். பன்னீர் பட்டர் மசாலா, ஷாஹி பனீர், பனீர் மக்னி மற்றும் பனீர் லபாப்தார் போன்றவற்றை வெங்காயம் பூண்டு இல்லாமல் செய்து சாப்பிடலாம். இவை மிக சுவையான ரெசிபிகளாகும். 

பன்னீர் கடலைமாகவு சில்லா

கடலைமாவுடன் பனீரை கலந்து அடை போல வார்த்து செய்யப்படும் சில்லா ஒரு ஆரோக்கியமான பனீர் ரெசிபி ஆகும். இதை காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம். கடலைமாவு மற்றும் பனீர் இரண்டிலும் அதிக புரதம் உள்ளது.

கார்ண் பனீர்

இது மிகவும் நல்ல ஸ்நாக்ஸ். இது செய்வதற்கும் மிக எளிது. இதை ஒரு ஸ்டார்டராக உட்கொள்ளலாம், விருந்துகளில் பரிமாறலாம். உடல் எடையை குறைக்க இது ஒரு சிறந்த உணவு வகையாக இருக்கும்.

பன்னீர் ரோல்

பனீர் ரோல் என்பது கோதுமை ரொட்டியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ரோல் ஆகும். இதில் பனீர் நிரப்பப்படுகிறது. இதை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த பனீர் டிஷ் ஒரு ஸ்ட்ரீட் ஃபுட்டாக முதலில் அறிமுகம் ஆனது. இப்போது இது மிக பிரபலமாக உள்ளது. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எலும்புகளும் தசைகளும் வலுவாக... பாலில் கலந்து சாப்பிட வேண்டிய ‘5’ உலர் பழங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News