உடல் ஆரோக்கியத்திற்கும் மனிதனின் இருப்புக்கும் அத்தியாவசியமானது நீர். நமது உடல் எடையில் 60% தண்ணீர் இருக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் நோய்களால் பிரச்சனை ஏற்படுகிறது. நீரிழப்பினால், தெளிவற்ற சிந்தனை, உடலில் அதிக வெப்பம், மனநிலை மாற்றங்கள். மலச்சிக்கல் மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட கடுமையான பிரச்சினைகளை ஏற்படுகிறது.
பொதுவாக ஆண்களின் உடல் எடையில் மொத்தம் 50 - 65 % நீர் இருக்கிரது என்றால், பெண்களுக்கு அது 45 - 60 % என்ற அளவில் இருக்கிறது. பிறந்த குழந்தைகளின் உடல் எடையில் 75 முதல் 78% வரை இருகும் நீரானது, ஒரே ஆண்டில் 65 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துவிடுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் அத்தியாவசியமானது என்றாலும், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நன்மைகள் உள்ளதாக சிலர் சொன்னால் இல்லை என்று சிலர் சொல்கின்றனர். உண்மையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | இனிக்கும் தர்பூசணியின் கசக்கும் பக்கம்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
உடலில் நீர்ச்சத்து குறைந்தால், உடலின் ஆற்றலும் குறைகிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்கள் விரைவாக பெருகி, உடலின் ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கிறது. இதனால் கவனம் அதிகரிக்கிறது. மூளை செயல்பாடு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கும் நீர், மனநிலையை சமநிலைப்படுத்தவும் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.
சருமம் மற்றும் முடிக்கு அழகூட்டும் நீர்
இது பல அழகு நன்மைகளையும் கொண்டுள்ளது. தண்ணீர் முடியின் தரத்தை அதிகரிக்கிறது.பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான முடிக்கு உடலில் நீர்ச்சத்து சரியாக இருக்க வேண்டும். தலைமுடியில் கால்பங்கு நீர் இருப்பதால், போதுமான அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் முடி உதிர்தல் அதிகமாவதோடு, முடி பலவீனமாகவும் மாறிவிடும்.
எடை குறைப்புக்கு உதவும் தண்ணீர்
வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தும்போது, உடல் வழக்கத்தை விட அதிக கலோரிகளை எரிக்கிறது. இந்த செயல்முறை உடல் எடை குறைய வழிவகுக்கிறது, தண்ணீரில் கலோரிகள் இல்லை என்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிக அளவு தண்ணீரைப் பருகலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
இது உங்கள் உடலில் இருந்து கழிவுகளை அகற்ற உதவுகிறது மற்றும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்றுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தப்படுத்த நீர் முக்கியமானதாக இருக்கிறது.
வெறும் வயிற்றில் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்?
காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கவும். காலையில்குடிக்கும் நீர் குளிர்ந்த நீராக இல்லாமல், வெந்நீராகவோ அல்லது சாதாரண தண்ணீராகவோ இருக்கட்டும். வெறும் தண்ணீரை அருந்த பிடிக்காவிட்டால், அதில் தேன் அல்லது எலுமிச்சை சேர்த்தும் குக்டிக்கலாம். ஆனால், ஒருவர் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது ஹைபர்தர்மியாவை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா: இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR