மறதியா இல்லை நினைவாற்றல் குறைபாடா? இரண்டுக்கும் உள்ள நூலிழை வித்தியாசம்

Memory Loss: நினைவாற்றல் இழப்பின் சில அறிகுறிகள் வயதாகும் மூப்பின் அறிகுறிகள் இல்லை. அறிவாற்றல் தொடர்பான நோய்களுடன் தொடர்புடைய நினைவாற்றல் இழப்பு...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 12, 2023, 12:21 PM IST
மறதியா இல்லை நினைவாற்றல் குறைபாடா? இரண்டுக்கும் உள்ள நூலிழை வித்தியாசம் title=

வயது தொடர்பான மறதி என்பது மாற்றங்கள் பொதுவாக கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஆனால் அறிகுறிகள் மிகவும் வித்தியாசமானதாக இருந்தால், நிச்சயம் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

நினைவாற்றலை இழப்பு
வயது முதிர்ச்சியாகும்போது, அதனுடன் ஞாபக மறதியும் சேர்ந்து கொள்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. நபர்களின் பெயர்கள், இடங்களை நினைவில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது என்பது தொடங்கி, ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருப்பது, அன்றாட விஷயங்களை மறந்துவிடுவது, நேரத்தைப் பற்றிய குழப்பம் என நினைவாற்றல் இழப்புக்கு பல உதாரணங்களை அடுக்கலாம்.

வயதாகும்போது இதுபோன்ற பிரச்சனைகள் தோன்றத் தொடங்கும், ஆனால் நினைவாற்றல் இழப்பின் வேறு சில அறிகுறிகள் வயதாகும் மூப்பின் அறிகுறிகள் இல்லை என்பதும், அது அறிவாற்றல் தொடர்பான நோய்களுடன் தொடர்புடையவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நினைவாற்றல் இழப்பு - அசாதாரண அறிகுறிகள்
மனித மூளைக்கு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் திறன் உள்ளது, ஆனால் அது கற்றுக் கொள்வதை நிறுத்தும்போது, ​​அது கவலைக்குரியதாக இருக்கலாம். தொழில்நுட்பம் அல்லது பணிகள் போன்ற புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது அறிவாற்றல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

எளிதான பணிகளும் கடினமாக இருக்கலாம்
தினசரி செய்ய வேண்டிய வேலைகளே மிகவும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியிருக்கலாம். இது ஒரு விசித்திரமான மாற்றமாக இருக்கும். இது அறிவாற்றல் தொடர்பான ஆரோக்கிய பிரச்சனையாக இருக்கலாம்.  

மேலும் படிக்க | எண்ணெய் குளியலும் முடி பாதுகாப்பும்! தீபாவளி கங்கா ஸ்னானம் ஆச்சா? கூந்தல் வளர டிப்ஸ்
 
பேசியதை மறப்பது
சிலர் முழு உரையாடலையும் மிக விரைவாக மறந்துவிடுவார்கள். ஆம், மிகவும் பழைய உரையாடல்களை மறந்துவிடுவது மனித இயல்பு, ஆனால் சமீபத்தியவை அல்ல. மேலும், சில சமயங்களில், நாம் கடினமாக முயற்சி செய்தால், பழைய உரையாடல்களை கூட நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

பழக்கமான இடங்களை மறப்பது
மிகவும் பரிச்சயமான இடங்கள், தெருக்கள் அல்லது அவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போகலாம். பொதுவாக இந்த விஷயங்கள் மனித மனதில் இயல்பாக தங்கிவிடும், இவற்றை மறப்பது வழக்கத்திற்கு மாறானதாகவும் கவலைக்குரியதாகவும் தோன்றலாம்.

மிகக் குறுகிய இடைவெளியில் பேசியதையே பேசுவது
அல்சைமர் மற்றும் டிமென்ஷியா நோயாளிகள், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாலும் தாங்கள் என்ன சொன்னோம் என்பதை மறந்துவிடுகிறார்கள். கடுமையான அறிவாற்றல் வீழ்ச்சியின் முக்கிய அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும். உங்கள் அன்புக்குரியவரும் இதைச் செய்கிறார் என்றால், வயது தொடர்பான நினைவாற்றல் இழப்புக்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள்.  

உண்மையில் அறிவாற்றல் குறைபாடு என்பது ஒரு நோய் அல்ல, ஆனால் ஒருவரின் நிலையை விவரிக்கிறது. நினைவாற்றல் அல்லது கவனம் செலுத்துதல் போன்ற விஷயங்களில் அவர்களுக்கு சிக்கல் உள்ளது என்று அர்த்தம். அவர்கள் பேசுவதில் அல்லது புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருக்கலாம்.  

அறிவாற்றல் என்பது சிந்தனை, அனுபவம் மற்றும் புலன்கள் மூலம் அறிவு மற்றும் புரிதலைப் பெறுவதற்கான மனதின் செயல்பாடு ஆகும். கவனம், நினைவாற்றல் , அறிவு, முடிவெடுத்தல் , திட்டமிடல், பகுத்தறிவு, தீர்ப்பு, உணர்தல், புரிதல், மொழி மற்றும் பார்வை சார்ந்த செயல்பாடு போன்ற உயர்நிலை அறிவுசார் செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது அறிவாற்றல் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் படிக்க | ஆஸ்துமா நோயாளிகள் தீபாவளி புகையில் இருந்து தப்பிப்பது எப்படி? இதோ 5 டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News