நவீன வாழ்க்கை முறை காரணமாக, பெரும்பாலான இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்து அதிகரித்துள்ளது. தற்போது இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக, மாரடைப்பு வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், புதிய மருந்து மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மாரடைப்பு குறித்த பயடத்துடன் இருந்த மக்களுக்கு இது சற்று ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.
விஞ்ஞானிகள் ஆய்வில் புதிதாக கண்டுபிடித்துள்ள மருந்தின் பெயர் Nexletol. ஆனால், Nexletol ஒரு ஸ்டேடின் அல்ல. ஸ்டேடின்கள் என்பது கொழுப்பைக் குறைக்கப் பயன்படும் சில இரசாயனங்களின் குழு. இது சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. ஆனால் புதிய மருந்து Nexletol ஒரு ஸ்டேடின் அல்ல. அதனால்தான் புதிய மருந்தால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. நெக்ஸ்லெட்டால் இருதய சிக்கல்களைக் குறைப்பதோடு, கொழுப்பினால் ஏற்படும் நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Nexletol: மாரடைப்படை தடுக்கும் புதிய கொலஸ்ட்ரால் மருந்து நெக்ஸ்லாடோல்!
குளோபல் நீரிழிவு நோய் ஆய்வின்படி, அதிக கொழுப்பு உள்ளவர்கள் ஸ்டேடின்களை எடுத்துக்கொள்ள பாரம்பரியமாக பரிந்துரைக்கப்பட்டு வந்தது. இருப்பினும், இந்த மருந்துகளின் பக்க விளைவுகளால், மில்லியன் கணக்கான மக்கள் இந்த மருந்துகளை எடுக்க முடியாமல் போனது. சிலர் பக்கவிளைகள் இருப்பதை தெரிந்து கொண்டதும் அவற்றை எடுக்கவில்லை. நெக்ஸ்லெட்டால் வேதியியல் ரீதியாக பெம்பெடோயிக் அமிலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது ஸ்டேடின் இல்லையென்றாலும், ஸ்டேடின்கள் அடங்கிய மருந்துகள் செயல்படுவதைப் போலவே இதுவும் செயல்படுகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்க ஸ்டேடின்கள் இன்றும் ஒரு சிறப்பு மருந்து என்பதில் சந்தேகமில்லை என முன்னணி ஆய்வாளர் டாக்டர் ஸ்டீவன் நிசென் கூறினார். ஆனால் இந்த மருந்தை உட்கொள்ளாதவர்களுக்கு மற்ற மருந்துகளால் கொலஸ்ட்ராலைக் குறைப்பது மிகவும் கடினம் என்றாலும் புதிய மருந்து நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த மருந்து பொது சுகாதாரத்தில் மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. அதாவது லட்சக்கணக்கான மக்கள் இந்த மருந்தால் பயனடைவார்கள்.
உடலில் அதிக கொலஸ்ட்ரால் அதாவது எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, அது தமனிகளில் ஒட்டிக்கொண்டு, தமனிகளின் சுவர்களை மெலிக்கத் தொடங்குகிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் சிக்கல் ஏற்பட்டு, இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. க்ரெஸ்டர் மற்றும் லிபிட்டர் போன்ற ஸ்டேடின்கள் கல்லீரலில் அதிக எல்டிஎல் உற்பத்தி செய்வதைத் தடுக்கின்றன. இது இதயம் தொடர்பான நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. ஆனால் ஒரு ஆய்வின் படி, 10 சதவிகிதம் அதிகமான கொலஸ்ட்ரால் நோயாளிகள் ஸ்டேடின்களை எடுத்துக் கொள்வதில்லை. சிலருக்கு ஸ்டேடின்களை உட்கொள்வதால் தசை வலி ஏற்படுகிறது. Nexletol என்ற புதிய மருந்தை உட்கொள்வதால் தசைகளில் வலி ஏற்படாது மேலும் கல்லீரலில் கெட்ட கொலஸ்ட்ராலை உருவாக்குவதையும் தடுக்கிறது.
மேலும் படிக்க | உடல் எடை ஓவரா எகிறுதா? இரவு உணவில் இதை சாப்பிடுங்க.. சூப்பரா குறையும்
மேலும் படிக்க | காலை எழுந்ததும் இந்த தவறுகளை மறந்தும் பண்ணாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ