நம் உடலில் உள்ள உறுப்புகளில் அளவில் பெரியதும், அதிகம் வேலை செய்யும் உறுப்பும் கல்லீரல் தான். நமது உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரி போல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடல் கிரகித்துக் கொள்ளவும் கல்லீரல் உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஆனால், இன்றைய மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாத நிலை ஆகியவை காரணமாக கொழுப்பு கல்லீரல் பிரச்சனை என்பது பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனையாக உள்ளது.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, மது அருந்தும் வழக்கம் இல்லாதவர்களுக்கு வரும் கொழுப்பு கல்லீரல் (Non-Alcoholic Fatty Liver Disease) ஒரு தீவிர உடல் நலப் பிரச்சனை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கல்லீரலில் அதிக கொழுப்பு சேரும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கல்லீரல் சரியாக செயல்பட முடியாது என்பதோடு, தீவிர நிலையில், கல்லீரல் செயலிழக்கும் அபாயமும் உண்டு.
துரித உணவுகள்
துரித உனவுகள் பெருகி விட்ட நிலையில், ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பர்கர்கள், சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகள் கொழுப்பு நிறைந்தவை. அதோடு துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடு டு ஈட் வகை உணவுகளில், சோடியம் அதிகம் உள்ளது. அதோடு, நீண்ட கால கெடாமல் இருக்க அவற்றில் சேர்க்கப்படும் பிரிசர்வேடிவ்கள் மற்றும் ரசாயனங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது. உடல் பருமன் கல்லீரலை கடுமையாக பாதிக்கிறது.
மைதா உணவுகள்
மைதாவினால் செய்யப்பட்ட பரோட்டா, பிரெட், பாஸ்தா கல்லீரலை காலி செய்து விடும். இதில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. மேலும், இதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்த உணவுப் பொருட்களில் நார்ச்சத்து மிக மிக குறைவாக உள்ளது. இதனை அதிகமாக சாப்பிடுவதால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.... உங்களை ஏமாற்றாத டயட் பிளான் இதோ
அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்
பால், பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய் போன்ற அதிக கொழுப்புள்ள பால் பொருட்களும் கொழுப்பு கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் இவற்றில் அதிக நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இது கல்லீரலில் கொழுப்பாக சேர்கிறது.
சர்க்கரை கலந்த பானங்கள்
அதிக அளவில் சர்க்க்ரை கொண்ட சோடா பானங்கள், எனர்ஜி டிரிங்க்ஸ் எனப்படும் ஆற்றல் பானங்கள், கேன் அல்லது பேக் செய்யபட்ட பழச்சாறுகள் கொழுப்பு கல்லீரல் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். அவற்றில் நிறைய சர்க்கரை மற்றும் பிரக்டோஸ் உள்ள நிலையில், இவை கொழுப்பாக கல்லீரலில் சேரும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் பிற உணவுகள்
தொத்திறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஹாட் டாக் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் அதிக அளவு கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. இவை கல்லீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ