வியக்கத்தக்க ஆரோக்கிய நலன்களைக் கொடுக்கும் பழம் பப்பாளி என்றால் மிகையில்லை. இப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது உங்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இது வைட்டமின் ஏ முதல் வைட்டமின் பி, சி, ஈ மற்றும் வைட்டமின் கே வரை ஏராளமான அளவில் காணப்படுகிறது. இதனுடன், கலோரிகள், கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. இதை சாப்பிடுவதால் உங்கள் செரிமான அமைப்பு சீராக இருக்கும். இது தவிர, மருத்துவ குணங்கள் நிறைந்த பப்பாளி நீரிழிவு, புற்றுநோய், இதயம் மற்றும் பிளேட்லெட்டுகளை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் இதை அளவிற்கு அதிகமான உட்கொள்வது உங்கள் உடல் நிலையை கெடுக்கும். இது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை தருகிறதோ, அதே அளவு தீமையையும் உண்டாக்கும். பப்பாளியை எவ்வளவு சாப்பிட வேண்டும் மற்றும் அதன் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்...
1 நாளில் எவ்வளவு பப்பாளி சாப்பிட வேண்டும்?
ஒரு நாளைக்கு 100 கிராம் முதல் 120 கிராம் பப்பாளியை மட்டுமே சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதை விட அதிகமாக பப்பாளி சாப்பிட்டால் பலன் கிடைப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். இது தவிர, பப்பாளி இலையின் சாறு குடித்து வந்தால், தினமும் 5 முதல் 6 ஸ்பூன்கள் மட்டும் போதும். பப்பாளியை எப்போதும் சாப்பிடுவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் அல்லது பின் சாப்பிட வேண்டும்.
மிதமிஞ்சிய பப்பாளி உணவுக் குழாயை சேதப்படுத்தும்
பப்பாளியில் லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் என்ற கலவை உள்ளது. இது கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதத்தை உடைக்க வேலை செய்கிறது. ஆனால் அதிகப்படியாக சாப்பிடுவது தொண்டைக்கு சேதம் விளைவிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது உணவு முழாயை சுருக்க கூடும் என ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | மாதவிடாய் தள்ளிப்போனால் கர்ப்பமா? இல்லை ‘இந்த’ சீரியசான பிரச்சனைகளா?
பப்பாளியை அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்
பப்பாளியை அதிகமாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. அதன் அதிகப்படியான நுகர்வு காரணமாக, வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான அமைப்புக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் காணப்படும் அதிக நார்ச்சத்து, உணவை வேகமாக செரிக்கவும், மலத்தை மென்மையாக்கவும் மலமிளக்கியாக செயல்படுகிறது.
சர்க்கரை நோய் மருந்துடன் தவறுதலாக கூட பப்பாளியை சாப்பிடாதீர்கள்
நீங்கள் நீரிழிவு மருந்தை சாப்பிடுபவராக இருந்தால், பப்பாளி சாப்பிடுவது உங்களுக்கு நல்லதல்ல. இதற்கு காரணம், பப்பாளியில் சர்க்கரை நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. அதன் பயன்பாடு இரத்த சர்க்கரை பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் ஒரு நிபுணரை அணுகவும்.)
மேலும் படிக்க | கால் பித்த வெடிப்பு சரி செய்ய ஓட்ஸுடன் இந்த ஒரு பொருள் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ