நமது உடலின் ஒவ்வொரு பாகமும் மிகவும் முக்கியமானது. உடலின் ஒரு பகுதியில் பிரச்னை ஏற்பட்டால், அது முழு உடலையும் பாதிக்கும். உடலில் இருந்து நச்சு இரசாயனங்களை அகற்ற கல்லீரல் உதவுகிறது. இது தவிர, கல்லீரல் பல தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களைச் சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கல்லீரலுக்கு பல செயல்பாடுகள் இருக்கும்போது, அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். அதிலும் குளிர்காலத்தில் கல்லீரலை டீடாக்ஸ் செய்து இன்றியமையாதது. பொதுவாக குளிர் காலத்தில் எண்ணெய், காரமான மற்றும் அதிகப்படியான உணவை உண்பது அக்ல்லீரல் தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே, கல்லீரலின் நச்சுத்தன்மையை நீக்க எளிய வீட்டு வைத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
குளிர்காலத்தில் உடற்பயிற்சியும் பலர் செய்வதில்லை. இதனால் உடல் நலத்தில் மோசமான பாதிப்பு ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், கல்லீரல் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. இருப்பினும், கல்லீரலில் படிந்திருக்கும் அழுக்குகள் சுத்தமாகி, எந்த பிரச்சனையும் இல்லாமல், அவ்வப்போது கல்லீரலை டீடாக்ஸ் செய்து நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்குவது மிகவும் அவசியம். அது தவிர மலச்சிக்கல் மற்றும் வயிறு உபாதைகள் இருந்தாலும், கல்லீரல் டீடாக்ஸ் செய்வது அவசியமாகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரு டீடாக்ஸ் பானங்கள் உங்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.
டீடாக்ஸ் நீரின் நன்மைகள்
1. டிடாக்ஸ் தண்ணீரை அவ்வப்போது குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
2. டீடாக்ஸ் நீர் குடிப்பதால் சிறுநீர் பிரச்சனைகள் குறைவதுடன், உடலில் சேரும் அழுக்குகளும் நீங்கும்.
3. டீடாக்ஸ் நீரை உட்கொள்வதன் மூலம், வயிற்றில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, நன்கு சுத்தம் செய்யப்படுகிறது.
4. டீடாக்ஸ் நீர் குடிப்பதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு பளபளப்பும் கிடைக்கும். இதனால் சருமம் மாசு மரு இல்லாமல் இருக்கும்.
மேலும் படிக்க | மனதையும் உடலையும் சோர்வாக்கும் பொட்டாசியம் குறைபாடு! இந்த அறிகுறிகள் இருக்கா?
டீடாக்ஸ் நீரை எவ்வாறு தயாரிப்பது
பச்சை ஆப்பிள் டீடாக்ஸ் பானம்
இதற்கு நீங்கள் 1 லிட்டர் தண்ணீர், 1 பச்சை ஆப்பிள், சில சியா விதைகள், புதினா இலைகள் மற்றும் சில துளசி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வடிகட்டிய தண்ணீரை அதாவது RO மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5 துளசி இலைகள் மற்றும் 10 புதினா இலைகளை கழுவி தண்ணீரில் போடவும். ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும்.
இப்போது அதில் 1 ஸ்பூன் சியா விதைகளை சேர்த்து எல்லாவற்றையும் கலக்கவும். இதனை 1 மணி நேரம் ஊற வைத்து விட்டு, பிறகு குடிக்கலாம்.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க செய்ய வேண்டியவை
கல்லீரல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், இதற்கு உணவு மற்றும் பானங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும், பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளுக்கும், மது போன்ற கெட்ட பழக்கங்களுக்கும் குட்-பை சொல்லி கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். உடலில் இருந்து கொழுப்பைக் குறைக்கவும், டீடாக்ஸ் செய்யவும், இஞ்சி எலுமிச்சை கலந்த நீரும் மிகவும் பயனளிக்கும். எலுமிச்சை கல்லீரலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் திறன் பெற்றது.கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த பானமும் உதவியாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் போக்கும் மணத்தக்காளிக் கீரையின் அற்புதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ