Weight Management: உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?

உடல் எடை அதிகமாக இருந்தால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. அதேபோல், பக்கவாதம் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2021, 03:41 PM IST
  • உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?
  • உடல் பருமன் ஒரு பேரிடர் நோய்
  • உடல் எடையை அதிகரிப்பதற்கு அடிப்படை நாம் உண்ணும் உணவில் இருக்கும் கலோரிகள் தான்
Weight Management: உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?   title=

உடல் பருமன் ஒரு பேரிடர் நோய் என்று உலகெங்கிலும் உள்ள சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆண்டுதோறும் உடன் பருமன் தொடர்பான சிக்கல்களால் குறைந்தது 28 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக கூறும் ஆய்வுகள் அச்சுறுத்துகின்றன.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (Centers for Disease Control and Prevention) தரவுகளின் படி, 2017 முதல் 2018 வரை அமெரிக்காவில் 42.4% முதியோர்களுக்கு உடல் பருமன் பாதிப்பு இருந்தது.

உடல் எடை அதிகமாக இருந்தால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. அதேபோல், பக்கவாதம் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. ஒருவரது உடல் எடையை அதிகரிப்பதற்கு அடிப்படை நாம் உண்ணும் உணவில் இருக்கும் கலோரிகள் தான்.

Read Also | Weight Loss: எடை இழப்பு மாத்திரைகள் பலன் தருமா? பக்க விளைவுகள் ஏற்படுத்துமா?

கலோரிகள் என்பது நமது உடலுக்கு கிடைக்கும் சக்தியை அளவிடும் அலகாகும். சில உணவுகளில் எவ்வளவு சக்தி உள்ளது என்பதை அளக்க நாம் கலோரி என்ற அலகை பயன்படுத்துகிறோம். ஒருவருக்கு தினசரி எவ்வளவு சக்தி தேவை என்பதை அளக்கவும் (required energy) கலோரி பயன்படுகிறது.  

1 கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரிகள் உள்ளது. 1 கிராம் கொழுப்பில் 9 கலோரிகள் உண்டு. 1 கிராம் புரதச் சத்தில் 4 கலோரிகள் உண்டு. 

சில உணவுப் பொருட்களில் உள்ள கலோரி அளவுகளை தெரிந்துக் கொள்வோம். 100 கிராம் பொருட்களுக்கு நிகரான கலோரி அளவுகள்: 

Also Read | Retro Walking: பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களை வியக்க வைக்கும்

பசுவின் பால் 100 மி.லி – 65 கலோரிகள்
எருமைப்பால் 100 மி.லி – 117 கலோரிகள்
வெல்லம் 100 கிராம் – 383 கலோரிகள்
தேன் 100 மி.லி – 320 கலோரிகள்
எள் 100 கிராம் – 564 கலோரிகள்
நிலக்கடலை  100 கிராம் – 549 கலோரிகள்
வாழைப்பழம் 100 கிராம் – 150 கலோரிகள்
மரவள்ளிக் கிழங்கு  100 கிராம் – 159 கலோரிகள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு  100 கிராம் – 152 கலோரிகள்
உருளைக்கிழங்கு 100 கிராம் – 99 கலோரிகள்
கோதுமை ரொட்டி 100 கிராம் – 238 கலோரிகள்
கோதுமை மாவு  100 கிராம் – 348 கலோரிகள்
சப்பாத்தி  100 கிராம் – 124 கலோரிகள்
அரிசி 100 கிராம் – 345 கலோரிகள்
கேழ்வரகு 100 கிராம் – 331 கலோரிகள்
சோளம் 100 கிராம் – 342 கலோரிகள்
கம்பு வகை 100 கிராம் – 360 கலோரிகள்

இவற்றில் இருந்து உங்கள் எடை மேலாண்மைக்கு எந்த வகை உணவுகள் சரியானவை என்பதை தீர்மானித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கவும்.

Also Read | நடுத்தர வயதினரிடையே அதிகரிக்கும் “Stress Fracture”; அதிக உடற்பயிற்சி காரணமா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News