கர்ப்பம் தரிக்க வேண்டும் என்றால், நாம் அதற்கு முதலில் அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும். ஆனால் அப்படி அடிக்கடி கர்ப்ப காலத்தின் போது உடலுறவு கொள்வது நல்லதுதானா என பலர் புரியாமல் சிக்கி தவிக்கின்றனர்.
கர்ப்பக்காலத்தின் போது உடலுறவு…
பெண்களுக்கு இயல்பாகவே மாதவிடாய் காலத்திற்கு முன்போ அல்லது அண்டவிடுப்பு (Ovulation) காலத்தின் போதோ உடலுறவு கொள்ள ஆசை அதிகரிக்கும். இது, ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் இந்த ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக ஏற்படும். அப்போது அவர்களுக்கு உடலுறவு தொடர்பான ஹார்மாேன்களும் தூண்டிவிடப்படும். ஆனாலும், குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு சிலர் ‘அந்த’ ஆசைகளை தள்ளிப்போடுவர். இது குறித்த புரிதல் இன்றி பல தாய்மார்கள் உள்ளனர். அவர்களின் சந்தேகங்களுக்காக அனைத்து விடைகளும் இங்கே இருக்கின்றன.
இது நல்லதா..?
உங்கள் வயிற்றில் உள்ள குழந்தையை கருப்பையில் உள்ள ஆமியாட்டிக் திரவம் என்ற ஒருவகை வளையம் குழந்தையை பாதுகாக்கிறது. இது தவிர, கருப்பையில் உள்ள வலுவான தசைகளும் குழந்தையை பாதுகாக்கிறது. இதனால், நீங்கள் கர்ப்பகாலத்தின் போது உடலுறவு கொள்வது உங்கள் குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால், உங்கள் பிரசவத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என மருத்துவர் கூறியிருந்தார், பிரசவ காலத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு உடலுறவு கொள்வதை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | மைக்ரோவேவ்... ‘இவற்றை’ தவறுதலாக கூட சமைக்கவோ சூடுபடுத்தவோ செய்யாதீர்கள்!
இதனால் கர்ப்பம் கலைய வாய்ப்பு இருக்கிறதா..?
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது கருச்சிதைவைத் உண்டாக்காது. கரு சாதாரணமாக வளர்ச்சியடையாததால் பெரும்பாலான கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன. அதனால் இது குறித்து பயப்பட வேண்டாம்.
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ள சிறந்த நிலை என்ன.?
பெரும்பாலான சமயங்களில் உங்களுக்கு எந்த நிலை சரி என்று படுகிறதோ, அந்த நிலையிலேயெ உடலுறவு கொள்ளலாம். நீங்கள் மேல் நிலையிலும் உங்கள் பார்ட்னர் கீழ் நிலையிலும் இருப்பது இன்னும் நிறைய மகிழ்ச்சியை உண்டாக்கும்.
ஆணுறைகள் தேவையா..?
கர்ப்ப காலத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, உங்கள் பார்ட்னருக்கு சமீபத்தில் பாலியல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் எந்த வகையான உடலுறவும் அவருடன் வைத்துக்கொள்ள வேண்டாம். அப்படி எந்த நோய் தொற்றும் உங்கள் பார்ட்னருக்கு இல்லை என்றால் ஆணுறைகள் உபயோகித்து உடலுறவு வைத்து கொள்ளலாம்.
எப்போதெல்லாம் உடலுறவை தவிர்க்க வேண்டும்..?
கர்ப்ப காலத்திலு உடலுறவு கொள்கையில் நம் மார்பகம் விரிவடைதல், உச்ச நிலையை எட்டுதல் போன்ற விஷயங்கள் ஏற்படும். இதனால் நம் கருப்பை சுருங்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு பின்வரும் அறிகுறிகளுள் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடலுறவு வைத்துக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.
-உடலுறவின் போது பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிந்தால் உடலுறவை தவிர்க்கவும்.
-தண்ணீர் குடம் என சொல்லப்படும் ஆம்னியாட்டிக் திரவம் கசிதல் இருந்தால் உடலுறவுக்கு நோ சொல்லிவிடுங்கள்.
-உங்கள் கருப்பை வாய் முன்கூட்டியே திறக்கத் தொடங்குகினால் உடலுறவு கொள்ளக்கூடாது.
-இதற்கு முன்னர் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்திருந்தால் உடலுறவை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | முட்டையின் மஞ்சள் கருவில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா? தெரிஞ்சுக்கோங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ