கொரோனா வைரஸ் இதுவரை உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 16 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மூச்சுத் திணறலை அதிகரிக்கும் இந்த வைரஸ், கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. இப்போது பல நாடுகள் அதன் தடுப்பு மருந்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. பல தடுப்பூசிகளும் ஒப்புதல் பெறத் தொடங்கியுள்ளன.
ஆனால், இது குறித்து சமூக ஊடகங்களில் பல விஷயங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தடுப்பூசி பற்றி பரப்பப்படும் போலியான விஷங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும். தற்போது இது குறித்து உள்ள பல வதந்திகளைப் பற்றியும் அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
வதந்தி: அவசரமாக செய்யப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை
விளக்கம்: தடுப்பூசி தயாரிக்க நிச்சயமாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால், தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) தயாரிக்கும் வேகம் அதிகரிக்கப்பட்டது. இந்த பணி மிக வேகமாக நடந்தது என்றும் நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் உள்ள காரணம் வேறு. தடுப்பூசி தயாரிப்பதில் எந்தவிதமான கவனக்குறைவோ அல்லது அவசரமோ காட்டப்படவில்லை. மாறாக, அரசாங்கத்திடமிருந்தும் சுகாதார நிறுவனத்திடமிருந்தும் ஒப்புதல்கள் ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டன. ஒப்புதலில் உள்ள தேவையற்ற சிரமங்கள் தளர்த்தப்பட்டன.
வதந்தி: தடுப்பூசி மூலம் உங்களுக்கு கோவிட் தொற்று ஏற்படலாம்.
விளக்கம்: நிச்சயமாக இல்லை. பெரும்பாலான தடுப்பூசிகளில் வைரஸின் முழு அளவு இருப்பதில்லை. தடுப்பூசியில் வைரஸின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல் அல்லது பிற எதிர்வினைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் விளைவுகளால் ஏற்படுகின்றன. கோவிட் வைரசும் சில தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு இந்தியாவிலேயே (India) தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இது மிகவும் பலவீனமான வைரஸ் என்பதால், இதனால் உங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. காசநோய் மற்றும் பெரியம்மை போன்ற நோய்களிலும் இதுபோன்ற பல தடுப்பூசிகள் முன்னர் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வதந்தி: தடுப்பூசி போட்ட பிறகு முகக்கவசம் தேவையில்லை
விளக்கம்: இல்லை. தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கும், வைரஸ் உடலில் பரவாமல் தடுப்பதற்கும் மட்டுமே செயல்படும். இருப்பினும், இதற்கு பல மாதங்கள் ஆகலாம். நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை கூட தெளிவாக சொல்ல முடியாது. மேலும் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாது. எனவே, எதிர்கால ஆபத்தை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது மிக முக்கியமான விஷயமாகும்.
வதந்தி: தடுப்பூசியுடன் ஒரு சிப்பும் பொருத்தப்படும்
விளக்கம்: இது முற்றிலும் பொய்யான ஒரு செய்தியாகும். பல அறிக்கைகளில், கொரோனா தடுப்பூசி என்ற பெயரில் உடலில் சிப் பொருத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசியைக் கண்காணிக்க அதன் முன் நிரப்பப்பட்ட சிரிஞ்சில் ரேடியோ அதிர்வெண் குறிச்சொற்கள் இருக்கும் என்று அமெரிக்க நிறுவனம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், இந்த குறிச்சொற்கள் பெட்டியில் மட்டுமே இருக்கும். மைக்ரோசிப்கள் மிக பெரியவை. அவற்றை யாருக்கும் எளிதாக செலுத்த முடியாது. எனவே இந்த விஷயம் முற்றிலும் தவறானது.
வதந்தி: உங்கள் டி.என்.ஏ ஒரு தடுப்பூசி மூலம் மாற்றப்படும்
விளக்கம்: ஃபைசர் மற்றும் மொர்டானா தடுப்பூசிகள், எம்.ஆர்.என்.ஏ-வால் தயாரிக்கப்படுகின்றன. இது உங்கள் டி.என்.ஏவை மாற்றும் என்று அர்த்தமல்ல. COVID-19 தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ மூலக்கூறுகளை உடலுக்குள் கொண்டு வந்து மக்களின் டி.என்.ஏவை மாற்றும் என்று வதந்திகள் பரவின. இருப்பினும், இந்த கூற்று தவறானது. இந்த கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு எம்ஆர்என்ஏ மரபணு ரீதியாக செல்கள் செருகப்படுகிறது. ஆனால் உங்கள் டிஎன்ஏ இருக்கும் உயிரணுக்களின் கருவை இவை அடையாது.
ALSO READ: கொரோனா தடுப்பூசி பதிவிற்கான வழிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள்
வதந்தி: வாழ்க்கை முழுமைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்
விளக்கம்: இதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது. தகவல் கிடைத்தவரை, தடுப்பூசிக்குப் பிறகு பல வாரங்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ஆனால், இது காய்ச்சலில் கொடுக்கப்படும் தடுப்பூசி போல ஒரு வருடம் இருக்குமா அல்லது டெட்டனஸ் போல் சில ஆண்டுகள் வேலை செய்யுமா அல்லது போலியோ மற்றும் பெரியம்மை தடுப்பூசிகள் போல் வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா என்று சொல்வது கடினம். இருப்பினும் இந்த தடுப்பூசிக்குப் நிச்சயமாக கோவிட் தொற்று காரணமாக நிகழும் கடுமையான விளைவுகளைத் தடுக்கும்.
வதந்தி: தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது
விளக்கம்: பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களில் கொடுக்கப்படும், சில வார இடைவெளியில் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்வது இப்போது நிபுணர்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம். எனவே இரண்டு டோஸ்கள் அறிவுறுத்தப்படுகின்றன.
வதந்தி: தடுப்பூசியின் பக்க விளைவுகள் கோவிட்டை விட ஆபத்தானவை
விளக்கம்: இதுபோன்ற பல பதிவுகள் சமூக ஊடகங்களில் (Social Media) காணப்படுகின்றன. இதில் தடுப்பூசி காரணமாக வைரஸை விட அதிகமான மக்கள் இறப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியால் சுமார் 7 லட்சம் பேர் கொல்லப்படலாம் என்று பில் கேட்ஸ் கூறியதாகவும் ஒரு கூற்று இருந்தது. இரண்டு கூற்றுக்களும் முற்றிலும் தவறானவை. 7 லட்சம் பேர் மட்டுமே பக்க விளைவுகளை காட்டக்கூடும் என்று பில் கேட்ஸ் கூறினார். இவற்றில், ஊசி போட்ட இடத்தில் வலி அல்லது காய்ச்சல் ஏற்படலாம். இது எந்தவொரு தடுப்பூசிக்கும் மிகவும் பொதுவானது.
ALSO READ: உங்களுக்கும் COVID-19 ஏற்பட்டிருக்கலாம்: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்ததா?
வதந்தி: பொருளாதார ரீதியாக பலவீனமான நபருக்கு முதல் தடுப்பூசி வழங்கப்பட்டது
விளக்கம்: பிரிட்டனின் 90 வயதான பெண் மார்கரெட் கீனனுக்கு Pfizer-ன் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டது. இருப்பினும், சமூக ஊடகங்களில் ஒருவர் நிதி ரீதியாக பின் தங்கிய நிலையில் இருந்த ஒரு நடிகருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்பட்டது. தடுப்பூசியை ஊக்குவிக்க யாரோ அவருக்கு பணம் கொடுத்துள்ளனர் என்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. மார்கரெட் கீனன் 2008 இல் இறந்துவிட்டார் என்றும் வதந்தி பரவியது.
வதந்தி: தடுப்பூசி பெண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்
விளக்கம்: சமூக ஊடகங்களில் வைரலான ஒரு இடுகை ஃபைசரின் ஆராய்ச்சித் தலைவர் இப்படி கூறியதாக தெரிவித்தது. இருப்பினும், ஃபைசரில் ஆராய்ச்சித் தலைவர் என்று எந்த பொறுப்பும் இல்லை. 2011 முதல், யாரும் இந்த பதவியை வகிக்கவில்லை. 95 சதவிகிதம் வரை பயனுள்ள தடுப்பூசி மலட்டுத்தன்மை போன்ற எந்தவொரு தீவிர பக்க விளைவுகளையும் காட்டுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உண்மை சரிபார்ப்பவர்கள் விளக்கியுள்ளனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR