Side Effects of Using Non Stick Cookware: மனிதர்கள் பல விஷயங்களில் பரிமாற்றம் அடைந்ததைப் போலவே, சமையல் பாத்திரங்களிலும் பல வகைகளில் முன்னேறி வருகின்றனர். மண்பாண்டத்தில் சமைக்க ஆரம்பித்த மனிதர்கள் தற்போது செம்பு பித்தளை, இரும்பு, எவர்சில்வர், நான்-ஸ்டிக், செராமிக் பாத்திரங்கள் வரை பல வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில், நான்-ஸ்டிக் குக்வேர், சமைக்கவும் பயன்படுத்தவும், சுத்தம் செய்வதும் எளிதாக இருப்பதால், நீண்ட காலமாக சமையலறையில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நான்-ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) ஒரு விரிவான வழிகாட்டுதலை பகிர்ந்து கொண்டுள்ளது. அதில் இந்தியர்கள் நான்-ஸ்டிக் பாத்திரங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. நான்-ஸ்டிக் குக்வேர் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு எதிராக அறிவுறுத்தியிருக்கும் அதே சமயத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் நான்-ஸ்டிக் குக்வேர் பாத்திரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் (Health Alert) பற்றிய ஆராய்ச்சி தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.
நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களை ஒருவர் ஏன் தவிர்க்க வேண்டும்?
நான்-ஸ்டிக் குக்வேர் நீண்ட காலமாக அதன் ஒட்டாத மேற்பரப்பு காரணமாக சமையலுக்கு வசதியான பாத்திரமாக கருதப்படுகிறது. அதனை சுத்தம் செய்வதும் எளிது. சமையலுக்கு குறைந்த எண்ணெய் தேவைப்படுகிறது. இருப்பினும், நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சுகாதார நிபுணர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் அதன் முடிவுகள் ஆரோக்கிய பாதிப்பை எடுத்துரைக்கின்றன. இதனி அடுத்து நுகர்வோர் தினசரி சமையலில் அவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
நான்-ஸ்டிக் குக்வேர்களில் சமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
நான்-ஸ்டிக் குக்வேர்களில் சமைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கான காரணம், ஒன்று பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் (PFOS). இவை டெஃப்ளான் போன்ற நான் - ஸ்டிக் பூச்சுகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகும். நான் - ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் அதிக வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது, இந்த இரசாயனங்கள் நச்சுப் புகைகளை காற்றில் வெளியிடலாம். இதனால் அவற்றுடன் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும். இந்த புகைகளை உள்ளிழுப்பது சுவாச பிரச்சனைகள், தைராய்டு கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உட்பட பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.
மேலும் படிக்க | புற்றுநோய் குறித்த இந்த விஷயங்கள் தெரியுமா? எச்சரிக்கை விடுக்கும் அறிகுறிகள்!!!
நான்-ஸ்டிக் பூச்சில் ஏற்படும் விரிசல்களால் உணவில் கலக்கும் ரசாயனம்
கூடுதலாக, நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் உள்ள நான்-ஸ்டிக் பூச்சுகள் காலப்போக்கில் மோசமடையலாம், குறிப்பாக அதிக வெப்பநிலையில் நான்-ஸ்டிக் பூச்சு சிதைவதால், சமைக்கும் போது உணவில் கசிந்து, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நுகர்வோர் உடலில் செல்லும் அபாயம் உள்ளது. இது குறிப்பாக அமில உணவுகளை சமைக்கும் போது அல்லது உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது நான் - ஸ்டிக் பூச்சுகளில் விரிசல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | கர்ப்பம் தரிக்க உதவும் யோகாசனங்கள்! இத்தனை இருக்கிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ