‘ரத்தக்கொதிப்பு ரத்தக் கொதிப்பு மாமனாருக்கு ரத்தக் கொதிப்பு’ ரிங் டோன் கேட்கும்போது சிரிப்பு வரலாம்… ஆனா… ரத்தக் கொதிப்பு வந்தவர்களுக்குத்தான் அவஸ்தை என்னவென்று புரியும். தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், அதிக உப்பு நிறைந்த, சரிவிகிதமற்ற பாஸ்ட் புட் உணவுகள் என, தற்போதைய லைப் ஸ்டைல் இளைஞர்களைக் கூட ரத்தக் கொதிப்புக்கு ஆளாக்கி விட்டது. மாத்திரையும் கையுமாக அவர்கள் சுற்றுவதைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கும். 40 - 50 வயதுக்கு மேல் தலை காட்ட வேண்டிய நோய்கள் 30 வயதிலேயே வருகிறதென்றால் கஷ்டம் தானே.
எந்த அளவுக்கு இளைஞர்கள் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) அறிக்கை மெய்ப்பித்திருக்கிறது. ஐசிஎம்ஆர் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் பெரும்பாலான இந்தியர்கள் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 கோடிக்கும் மேற்பட்டோர் ரத்தக் கொதிப்பால் அவதிப்படுகின்றனர் என்ற கணிப்பை வெளியிட்டுள்ளது.
தனது எக்ஸ் வலைத்தில்தான் இந்த புள்ளி விவரத்தை ஐசிஎம்ஆர் பதிவிட்டுள்ளது. அதில், இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியாமல் சுமார் 19 கோடி பேர் திண்டாடுகின்றனர். ஒன்று அல்லது இரண்டு கோடி பேர் வேண்டுமானால் கட்டுக்குள் வைத்திருக்கலாம். என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க | செரிமானம் சிறப்பாக இருக்க... டயட்டில் சேர்க்க வேண்டியவை..!!
உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு இந்த அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரம், கவலை அளிக்கக் கூடியது தான். இது குறித்து டெல்லி சி.கே.பிர்லா மருத்துவமனை இயக்குநர் ராஜீவ் குப்தா கூறுகையில், மோசமான சரிவிகிதமற்ற உணவு, அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, சோம்பேறியாக இருப்பது, போதுமான தூக்கமின்மை போன்றவை உயர் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கின்றன, எனத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, நீரிழிவு நோய், வளர்சிதை மாற்றம் போன்றவையும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வழி வகுக்கின்றன. சிலருக்கு பரம்பரையாகவும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது, என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையெல்லாம் பார்த்து நீங்களும் டென்ஷன் ஆகிடாதீங்க. இது வராம இருக்க என்ன வழின்னு டாக்டர்கள் சொல்லியிருக்கின்றனர். ரொம்ப சிம்பிள் தான்… தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். போதுமான தூக்கம்…. அதாவது 8 மணி நேரம் ஆழமான தூக்கம், தலை சுத்தற அளவுக்கு உங்களை வலம் வரும் பிரச்னைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு ஹாயா இருங்க… நீரிழிவு நோய் பிரச்னை இருக்கறவங்க… அதனை கன்ட்ரோல்ல வச்சுக்கங்க… அவ்ளோதான்.
உடற்பயிற்சின்னா ஜிம்முக்கு போய் வெயிட் எல்லாம் தூக்கணுமான்னு மலைக்காதீங்க.. விறு விறுன்னு 30 நிமிஷம் நடந்தாலே போதும். இப்பெவெல்லாம் இந்தியாவில் இல்லாத மருத்துவு வசதிகளே இல்லை. வெளிநாட்டவர் கூட இங்கு வந்து சிகிச்சை பெறக்கூடிய அளவுக்கு நவீன வசதிகள் இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் கூட உயர் சிகிச்சைகள் கிடைக்கின்றன. கவலையை விடுங்க… டென்ஷன குறைங்க… என்ஜாய்….
மேலும் படிக்க | புரத சத்தை அள்ளிக் கொடுக்கும் சில பருப்பு வகைகள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ