குளிர் காலத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சூப்பர் டிப்ஸ்

Health Tips: குளிர் காலத்தில் ஆரோக்கியமற்ற எதையாவது சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ, வயிற்றுப் பிரச்சினைகள் தீவிரமடையும். இந்த குறிப்புகளை மனதில் வைத்து குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சி செய்ய வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 22, 2023, 03:20 PM IST
  • குளிர்காலத்தில் உங்கள் குடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது எப்படி?
  • பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்
  • அதிக தண்ணீர் குடிக்கவும்.
குளிர் காலத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சூப்பர் டிப்ஸ் title=

Health Tips: குளிர்காலத்தில் செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும், ஏற்கனவே செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த குளிர் காலம் பிரச்சனைகளை அதிகரிக்கும். குளிர்காலத்தில் வளர்சிதை மாற்றம் குறைகிறது, இதன் காரணமாக, வயிறு தொடர்பான பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிக்கின்றன. ஆகையால், குளிர் காலங்களில் நீங்கள் குடல் ஆரோக்கியத்தை கவனித்து, இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் உணவுப் பழக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த காலத்தில் ஆரோக்கியமற்ற எதையாவது சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ, வயிற்றுப் பிரச்சினைகள் தீவிரமடையும். இந்த குறிப்புகளை மனதில் வைத்து குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சி செய்ய வேண்டும். 

குளிர்காலத்தில் உங்கள் குடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது எப்படி (How to take care of your Gut Health in Winters) 

பருவகால உணவு, உள்ளூர் உணவு

ஆடம்பரமான காய்கறிகள், சாலடுகள் மற்றும் பருப்பு வகைகளிலிருந்து விலகி இருங்கள். முடிந்தவரை பருவகால (Seasonal Vegetables) மற்றும் உள்ளூர் உணவுகளை உண்ணுங்கள். இந்த சீசனில் குறிப்பாக பல வகையான காய்கறிகள் கிடைக்கும், அவற்றை உட்கொள்ளுங்கள். கேரட், சேனைக்கிழங்கு, நூக்கல், பீட்ரூட், சூரன், முள்ளங்கி போன்றவை இந்த சீசனில் ஸ்பெஷல், இவற்றை சாப்பிடுங்கள். மொத்தத்தில், உங்கள் உள்ளூர் சந்தையில் எளிதாகக் கிடைப்பதை மட்டுமே சமைத்து உண்ணுங்கள். உங்கள் உணவு வயிற்றை அடைய குறைந்த நேரம் பயணித்தால், அது ஆரோக்கியமான உணவாக கருதப்படுகின்றது.

பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்

இந்த பருவத்தில், செரிமான அமைப்பு மெதுவாக இருக்கும், ஆகையால் காய்கறிகளை பச்சையாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. குறைந்தபட்சம் அவற்றை சிறிது வேகவைத்து சாப்பிட வேண்டும். சமைக்கப்படாத பச்சையான உணவுகளை ஜீரணிக்க நேரம் எடுக்கும். மேலும் இவற்றால் வயிற்றுக்கு பிரச்சனைகளை உருவாகும். ஆகையால், முடிந்தவரை சமைத்த காய்கறிகளை மட்டுமே சாப்பிடுங்கள். இந்தப் பருவத்தில் பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அதிகமாகக் கிடைக்கும். அவற்றை சாப்பிட்டு பலன் பெறுங்கள்.

மேலும் படிக்க | சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறிதும் அலட்சியம் வேண்டாம்: இவைதான் அறிகுறிகள்

உணவில் நெய் சேர்க்கவும்

குளிர்கால உணவை ஆரோக்கியமாகவும், செரிமானத்திற்கு சுலபமாகவும் மாற்ற, உங்கள் உணவில் நெய்யை (Ghee) சேர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும்போதும் ஒரு ஸ்பூன் நெய் உங்கள் வயிற்றுக்கு நல்லது. மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் இரவில் பாலை காய்ச்சி அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பருகிவிட்டு உறங்கவும். இது அதிக நிவாரணம் அளிக்கிறது. இந்த பாலில் இரண்டு சிறிய துளிகள் நெய் சேர்த்து உட்கொண்டால் வயிற்றில் உள்ள சூடும் அமைதியாக இருக்கும்.

அதிக தண்ணீர் குடிக்கவும்

குளிர்காலத்தின் மற்றொரு பிரச்சனை என்னவென்றால், குளிர் காரணமாக பெரும்பாலும் பலருக்கு தாகம் எடுக்காது. இதனால் நாம் தண்ணீர் (Water) குடிக்க மாட்டோம், அல்லது குறைந்த அளவு தண்ணீர் குடிக்கிறோம். இந்தப் பிரச்சனை தொடர்ந்தால் வயிறு சரியாகாது. ஆகையால் முடிந்தவரை தண்ணீர் குடிக்கவும். குளிர்காலத்தில் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மிக முக்கியமாகும். காய்கறி சாறு, சூப், பழச்சாஉ போன்ற வடிவங்களிலும் தண்ணீரை உட்கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்யுங்கள் 

குடல் ஆரோக்கியத்திற்கு இரண்டாவது மிக முக்கியமான விஷயம் உடல் இயக்கமாகும். உடலில் போதுமான இயக்கம் இல்லாதவர்களுக்கு வயிற்றுப் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் உங்களை உற்சாகமாக வைத்திருப்பது முக்கியம். அது மிகவும் அவசியம். ஆகையால் குளிர்காலத்தில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி (Exercise) முக முக்கியமாகும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Year Ender: சமூக ஊடகங்களில் உடல்நலம் & உடற்பயிற்சி பற்றிய வித்தியாசமான தேடல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News