எடையை குறைத்து சிக்கென மாற உதவும் கிச்சன் மசாலாக்கள்: சுவையாய் ஒரு தீர்வு

Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது எளிதல்ல. இதற்கு நேரமும் உழைப்பும் தேவை. உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 18, 2024, 12:42 PM IST
  • பல மசாலாப் பொருட்களில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் கலவைகள் இருக்கின்றன.
  • இவற்றின் காரணமாக கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன.
  • மசாலாக்கள் பொதுவாக செரிமானத்திற்கு உதவுகின்றன.
எடையை குறைத்து சிக்கென மாற உதவும் கிச்சன் மசாலாக்கள்: சுவையாய் ஒரு தீர்வு title=

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது இந்த நாட்களில் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் காரணமாக மக்கள் பல வித பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். எடை அதிகரிப்பதால் பல வித நோய்கள் நம்மை தாக்குகின்றன. நீரிழிவு நோய், இதய பிரச்சனைகள் ஆகியவை உடல் பருமனுடன் நேரடியாக தொடர்புடையவை.

உடல் எடையை குறைப்பது எளிதல்ல. இதற்கு நேரமும் உழைப்பும் தேவை. உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். 

எடை இழப்புக்கு உதவும் ஆயுர்வேதம்

தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க ஆயுர்வேதத்தில் பல வழிகள் உள்ளன. எடையை கட்டுப்படுத்தும் பல மசாலாக்கள் பற்றி ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம், மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தியே, இயற்கையான வழியில் எடையை குறைக்கலாம். இந்திய பாரம்பரிய மருத்துவ முறையில் ஆயுர்வேதத்திற்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. ஆயுர்வேதத்தின் படி, எடை இழப்புக்கு பயனுள்ளதாக விளங்கும் மசாலாக்களை பற்றி இங்கே காணலாம்.

எடை இழப்புக்கான மசாலா

மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் உள்ளது. இந்த குர்குமின் கலவை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்க உதவுகிறது. 

வாய்விலங்கம்: இந்த மூலிகை செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றி, உடலில் ஆற்றலை மேம்படுத்துகிறது.

இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. தினமும் காலையில் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன. இது தொப்பை கொழுப்பை எரிக்கவும் உதவும்.

கருப்பு மிளகு: கருப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகின்றது.

ஏலக்காய்: ஏலக்காய் செரிமானத்தை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்கின்றது. இதில் உள்ள பண்புகள் கூடுதல் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகின்றன.

மிளகாய்: மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கலவை அதற்கு காரமான தன்மையை அளிக்கின்றது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுவதோடு கொழுப்பை கரைக்கவும் உதவுகின்றது.

மேலும் படிக்க | மூளை கம்ப்யூட்டரை போல் வேலை செய்ய... உதவும் சில சூப்பர் உணவுகள்

இஞ்சி: இஞ்சி அதன் செரிமான பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகின்றது. இஞ்சி எடை இழப்பில் பெரிய வகையில் உதவுகின்றது.

குடுச்சி: இந்த மூலிகை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும் உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகின்றது. இது உடலில் சேரும் கூடுதல் கலோரிகளை வேகமாக அகற்றுவதால், உடல் எடையை குறைப்பதில் பெரிய வழியில் உதவுகின்றது.

எடை இழப்பில் மசாலாக்களின் பங்கு

- வளர்சிதை மாற்றம்: பல மசாலாப் பொருட்களில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் கலவைகள் இருக்கின்றன. இவற்றின் காரணமாக கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன. 

- செரிமானம்: மசாலாக்கள் பொதுவாக செரிமானத்திற்கு உதவுகின்றன. இதன் மூலம் இவை எடையையும் கட்டுக்குள் வைக்கின்றன. 

- அழற்சி எதிர்ப்பு பண்புகள்: மசாலாப் பொருட்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

- இரத்த சர்க்கரை அளவு: இலவங்கப்பட்டை போன்ற சில மசாலாப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கின்றன. இதன் காரணமாக உடல் பருமனும் குறைகின்றது.

உடல் எடையை குறைக்க, இப்படிப்பட்ட மசாலாக்களுடன், சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றையும் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News