Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அதிகரிக்கும் எடையால் உடல் தோற்றம் கெட்டுப்போவதுடன், இது ஆரோக்கியத்திலும் பல கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடல் பருமன் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். தங்கள் அதிகரித்த எடையைக் குறைக்க, மக்கள் உணவுக் கட்டுப்பாடு முதல் உடற்பயிற்சி வரை அனைத்தையும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் இவ்வளவு உழைத்தும் எடை குறைவதில்லை. ஆனால் எடையை குறைக்க (Weight Loss) இவ்வளவு கடினமான முறைகளை பின்பற்ற வேண்டும் என்றில்லை. சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
குளிர்காலத்தில் உடல் பருமனை தவிர்க்கும் வழிகள் (Weight Loss in Winters)
குளிர்காலத்தில் (Winters) பெரும்பாலும் நம் எடை வேகமாக அதிகரிக்கின்றது, தொப்பை கொழுப்பும் (Belly Fat) அதிகரிக்கின்றது. அதிகமான பசி, வழக்கமான உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது ஆகியவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். அதிக தூக்கம், அதிக ஸ்னாக்ஸ், குறைவான உடற்பயிற்சி ஆகியவைவையும் முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. குளிர்காலத்தில் உடல் பருமனை (Obesity) தவிர்க்க பெரிதும் உதவியாக இருக்கும் சில உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.
சுறுசுறுப்பாக இருங்கள்
குளிர்காலத்தில் குளிரின் காரணமாக படுக்கையை விட்டு எழுவதே பெரும் போராட்டமாக இருக்கக்கூடும். ஆனால் நீங்கள் காலையில் சிறிதளவு நடைப்பயிற்சி (Walking) அல்லது உடற்பயிற்சி செய்தால், அது உங்களை ஆரோக்கியமாக இருக்க உதவும். கூடுதலாக, உடற்பயிற்சி செய்வது இதய நோய்களுக்கான அபாயத்தையும் குறைக்கும்.
வேகமாக எடை இழக்க
உங்கள் எடை வேகமாக அதிகரித்தால், உடனடியாக உடற்பயிற்சி (Exercise) செய்யத் தொடங்குங்கள். உடற்பயிற்சியைத் தொடங்குவது உங்கள் எடையை எளிதாகக் குறைக்கும். உடல் பருமனின் ஆரம்ப நிலையிலேயே உடற்பயிற்சியை தொடங்குவது உடனடி எடை இழப்புக்கு மிக உதவியாக இருக்கும்.
வெயிலில் நடக்க வேண்டும்
வைட்டமின் டி குறைபாடு காரணமாக உடல் பருமன் அதிகரிப்பதாக சில ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. வெயிலில் (Sun Light) நடப்பதன் மூலம் போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கும் இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
குளிர்காலத்தில் உங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். இதற்கு உங்கள் உணவில் (Balanced Diet) ஒரு கண் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பைத் தவிர்க்க, குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த சர்க்கரை கொண்ட உணவை உண்ணுங்கள். அதிக தண்ணீர் குடிக்கவும், நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணவும். நல்ல தூக்கமும் மிக அவசியம். சரியான ஓய்வு எடுப்பது உடல் பருமனை தவிர்க்க உதவும்.
ஒரு டயட் பிளானை உருவாக்குங்கள்
பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் சாலடுகள் போன்றவை கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க உதவினாலும், குளிர்காலத்தில் சூடான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்கலாம். இந்த காலத்தில் சூடாக சாப்பிடுவது உணவு எளிதில் ஜீரணமாக உதவும். எனவே, குளிர்காலம் தொடங்கும் முன் உங்கள் டயட் பிளானை (Diet Plan) உருவாக்கி, சரியான உணவுகளை உண்ணுங்கள். சூடான மசாலா, மிளகாய், நெய் மற்றும் கேரட் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கடுமையான தொண்டை வலியா... கிச் கிச்சை போக்கும் வீட்டு வைத்தியங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ