இன்றைய காலகட்டத்தில், அசல் எது, போலியானது எது என கண்டுபிடிப்பதில் நமக்கு பெரும் சிக்கல் உள்ளது. அரிசி, மாவு, நெய், பால், தயிர், எண்ணெய் முதல் பழங்கள் மற்றும் காய்கறிகள் வரை வாடிக்கையாளர்களுக்கு தரமான முறையில் கிடைப்பதில்லை. உணவுகள் காய்கறிகளை சீக்கரமாக அதிக அளவில் வளர்ப்பதற்கு பல்வேறு வகையான இரசாயனங்கள் பாரபட்சமின்றி பயன்படுத்தப்படுகிறது. ஊசி மூலம் பழங்கள் பழுக்கவைக்கப்படுகிறது. இதுமட்டுமல்ல, இப்போது மசாலாப் பொருட்களும் கலப்படம் செய்யத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) அரசு சார்பில் பல்வேறு வகையான உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இதில், FSSAI குழு நடைமுறையில் உள்ள உண்மையான மற்றும் போலியான உணவு பொருட்களை அடையாளம் காட்டுகிறது. சமீபத்தில் FSSAI கலப்படமான சிவப்பு மிளகாய் பொடியை எப்படி அடையாளம் காண்பது என்று கூறியுள்ளது. வாருங்கள், உண்மையான மற்றும் போலி சிவப்பு மிளகாய் பொடியை எப்படி அடையாளம் காண்பது என்று தெரிந்து கொள்வோம்.
உங்கள் மிளகாய் தூள் மணல் பொடியா?
FSSAI அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடியில் உண்மையான மற்றும் போலி சிவப்பு மிளகாய் பொடியை அடையாளம் காண ஒரு எளிய தந்திரத்தை விளக்கும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. மேலும் "நீங்கள் வாங்கும் மிளகாய் தூளில் செங்கல் தூள் அல்லது மணல் கலப்படமா? எனவே உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதை கண்டுபிடிப்போம்" எனத் தலைப்பிட்டு காணொளியை பகிர்ந்துள்ளது.
ALSO READ | ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரையின் அற்புத நன்மைகள்
FSSAI வீடியோ:
Is your Chilli powder adulterated with brickpowder/sand?#DetectingFoodAdulterants_8#AzadiKaAmritMahotsav@jagograhakjago @mygovindia @MIB_India @AmritMahotsav @MoHFW_INDIA pic.twitter.com/qZyPNQ3NDN
— FSSAI (@fssaiindia) September 29, 2021
வீட்டிலேயே கலப்படத்தைக் கண்டறியலாம்:
உண்மையான சிகப்பு மிளகாய் பொடியை அடையாளம் காண எஃப்எஸ்எஸ்ஏஐ மிகவும் எளிமையான முறையை பரிந்துரைத்துள்ளது. அதை நீங்கள் வீட்டிலும் செய்து உண்மைத்தன்மையை அறிந்துக்கொள்ளலாம். அதற்கு எந்த ஆய்வகமும் தேவையில்லை.
உண்மையான மற்றும் போலி மிளகாய் பொடியை அடையாளம் காண எளிதான வழி
* முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை நிரப்பவும்.
* இப்போது ஒரு ஸ்பூன் சிவப்பு மிளகாய் பொடியை தண்ணீரில் போடவும்.
* இப்போது மிளகாய் பொடியை கரண்டியால் கிளற வேண்டாம், ஆனால் மிளகாய் தானாகவே தண்ணீரில் உள்ள கண்ணாடிக்கு கீழே போகட்டும்.
* இப்போது உங்கள் உள்ளங்கையில் தண்ணீரால்ல் நனைத்த மிளகாய் பொடியை எடுத்து லேசாக தேய்க்கவும்.
* தேய்த்த பிறகு கற்கள் போல நெருடல் இருப்பதாக உணர்ந்தால் அது கலப்படம்.
* அதே நேரத்தில், ஊறவைத்த மிளகாய் தூள் மிகவும் மென்மையாகவோ இருந்தால், அதில் சோப்பு soap stone powder கலக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ | Health News: குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR