முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னம்... சில ‘எளிய’ தீர்வுகள்!

கன்னம் மற்றும் தாடைக்கு அருகில் கொழுப்பு அதிக அளவில் சேரும் போது ‘இரட்டை கன்னம்’ உண்டாகி முக அழகைக் கெடுக்கும். தாடையின் அடியில் மற்றொரு அடுக்கு தோன்றி முக தோற்றத்தையே மாற்றியமைத்து விடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 17, 2023, 03:47 PM IST
  • சில எளிய பயிற்சிகள் முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கலாம்.
  • முக யோகா செய்ய இன்னும் பல வழிகள் உள்ளன.
  • தண்ணீர் குடிப்பதால் உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.
முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னம்... சில ‘எளிய’ தீர்வுகள்! title=

முகத்தில் கூடுதல் கொழுப்பு இருப்பது முக அழகை பாதிக்கும். கன்னம் மற்றும் தாடைக்கு அருகில் கொழுப்பு அதிக அளவில் சேரும் போது ‘இரட்டை கன்னம்’ உண்டாகி முக அழகைக் கெடுக்கும். தாடையின் அடியில் மற்றொரு அடுக்கு தோன்றி முக தோற்றத்தையே மாற்றியமைத்து விடும். முகத்தில் உள்ள கொழுப்பின் காரணமாக, 30 வயதுள்ளவர் முகம் 50 வயதினரை போல் தோன்ற ஆரம்பிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்,இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஜிம்மில் பல மணிநேரம் செலவழித்து, பலவிதமான வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலோனோர் எவ்வளவு முயற்சிகள் இருந்தும், அவர்களால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், சில எளிய பயிற்சிகள் முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதன் மூலம் சரியான தாடை வடிவத்தை பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம். 

வாயில் காற்றை நிரப்பும் பயிற்சி

இரட்டைக் கன்னத்தைக் குறைக்க இந்தப் பயிற்சியையும் செய்யலாம். இதைச் செய்ய, நீங்கள் நேரான நிலையில் உட்காருங்கள். அதன் பிறகு, உங்கள் வாயில் காற்றை நிரப்பவும். சுமார் 30 நொடிகள் அப்படியே வைத்துக் கொண்ட பின், மாறி மாறி வலது மற்றும் இடது பக்கமாக வாயில் உள்ள காற்றை ஊதவும். இதை நீங்கள் குறைந்தது 30 வினாடிகள் செய்ய வேண்டும். இது உங்கள் கன்னங்களில் சேர்ந்த கொழுப்பை குறைக்க உதவுகிறது.

முக பயிற்சி

இந்த பயிற்சியைச் செய்ய, உங்கள் முதுகை நேரான நிலையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்ளுங்கள். இதற்குப் பிறகு உங்கள் முகத்தை மேல் நோக்கி நீட்டவும். இதன் பிறகு முகத்தை கீழே இறக்கவும். இந்த பயிற்சியை 10 முறை செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் இரட்டை கன்னத்தில் இருந்து விடுபடலாம். இது முகத்திற்கான மிக சிறந்த பயிற்சியாக இருக்கும்.

மேலும் படிக்க | கழுத்தில் உள்ள மருக்கள் பாடாய் பாடுத்துதா? வலி இல்லாமல் இப்படி எளிதாய் நீக்கலாம்

நாக்கு பயிற்சி

இந்தப் பயிற்சியைச் செய்ய, உங்கள் உதடுகளை விரித்து, இப்போது நாக்கை ஒரு பக்கமாகத் திருப்பி, பின்னர் மெதுவாக கீழே இறக்கவும். இந்த பயிற்சி கன்னங்களை குறைக்கவும், தாடையை குறைக்கவும் மிக சிறந்தது.

கழுத்து - கன்னம் பயிற்சி

இந்த பயிற்சி மிகவும் எளிதானது. இதைச் செய்ய, நீங்கள் முதுகை நேரான நிலையில் வைத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார வேண்டும். பின்னர் உங்கள் வலது கையை இடது கன்னத்தில் வைக்கவும். அதன் பிறகு உங்கள் கழுத்தை வளைத்து முகத்தை கீழ் நோக்கி தள்ள முயற்சிக்கவும், மறுபுறம் அதையே மீண்டும் செய்யவும்.

முக யோகா

முக யோகா செய்ய இன்னும் பல வழிகள் உள்ளன. இவை அனைத்தின் நோக்கமும் முகத்திற்கான பயிற்சி. இதன் காரணமாக, முக இயக்கங்கள் அதிகரித்து, படிப்படியாக நீங்கள் விரும்பிய பலனைப் பெறத் தொடங்குவீர்கள். 

நிறைய தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் குடிப்பதால் உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது மட்டுமின்றி உங்கள் வயிறு நிரம்பவும் செய்கிறது. இதனால் திடீர் பசி உணர்வும் குறைகிறது. இது தவிர, குறைந்த அளவு தண்ணீரை உட்கொள்வது உங்கள் உடலை உடலில் தண்ணீரை சேமிக்க தூண்டுகிறது மற்றும் முகத்தின் கொழுப்பை அதிகரிக்கிறது. எனவே, உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்ற அதிக தண்ணீர் குடிக்கவும். ஏனெனில், இது சிறந்த திரவ சுழற்சியை ஊக்குவித்து வீக்கத்தை குறைக்கிறது.

ஆழ்ந்த தூக்கம்

தூக்கமின்மையால், கார்டிசோலின் அளவு, அதாவது ஸ்ட்ரெஸ் ஹார்மோன் உடலில் அதிகரிக்கிறது. இது ஒழுங்கற்ற உணவுப் பழக்கத்தைத் தூண்டுகிறது. இதனால் உடல் மற்றும் முகத்தில் கொழுப்பு அதிகரிக்கலாம். 6 முதல் 8 மணி நேரம் நல்ல தூக்கம் உடலில் நீர் தேங்குவதை தடுக்கிறது மற்றும் உடல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது தவிர, முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் இது உதவும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | Glowing Skin: சிகப்பான அழகைப் பெற மாதுளை பழம் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News