அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த அவகேடோ: இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் அதிக கொலஸ்ட்ராலால் உடலுக்கு ஏற்படும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் உடல் நலம் கெடும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய் (Coronary Artery Disease) மற்றும் டிரிபிள் வெசல் நோய் (Triple Vessel Disease) உள்ளிட்ட பல ஆபத்தான நோய்கள் உடலை ஆட்கொள்கின்றன.
அப்படிப்பட்ட நிலையில், கொலஸ்ட்ராலை கட்டுப்பத்த இயற்கையான வழிகளை பின்பற்றுவது நல்லதாகும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த அவகேடோ பழம் ஒரு மிகச்சிறந்த வழியாக இருக்கும்.
கொலஸ்ட்ராலை குறைக்க இதை சாப்பிடலாம்
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க அவகேடோ பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறுகிறார். இது விலை உயர்ந்த பழம். எனினும், கடந்த சில ஆண்டுகளாக இப்பழத்தை சாப்பிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதை சாப்பிடுவதால், இதயம், கண்கள் ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதுடன், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இது பெரிதும் உதவுகிறது.
அவகேடோவில் உள்ள சத்துக்கள்
ஒரு நடுத்தர அளவிலான அவகேடோ பழத்தில் சுமார் 240 கலோரி, 13 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் புரதம், 22 கிராம் கொழுப்பு (15 கிராம் மோனோசாச்சுரேட்டட், 4 கிராம் பாலிஅன்சாச்சுரேட்டட், 3 கிராம் நிறைவுற்றது), 10 கிராம் நார்ச்சத்து மற்றும் 11 மில்லிகிராம் சோடியம் உள்ளது. கொலஸ்ட்ராலைக் குறைக்க இந்த பழம் மிகவும் உதவியாக இருப்பதற்கு இதுவே காரணம்.
மேலும் படிக்க | இரவில் தூக்கம் வரவில்லையா? காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யுங்கள்!
தினமும் அவகேடோ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சுமார் 6 மாதங்கள் அவகேடோ பழம் அளிக்கப்பட்டு பலரிடம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைவரின் உடல்நிலையும் கண்காணிக்கப்பட்டது. அவகேடோ பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், இடுப்பு மற்றும் வயிற்றில் உள்ள கொழுப்பு குறைவதோடு, ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பின் அளவும் குறைவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வில் பங்குகொண்டவர்களின் உடல் எடை பராமரிக்கப்பட்டதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மனித உடலில் பல வித பிரச்சனைகளை உருவாக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதில் இந்த பழத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமல்லாமல், இந்த பழத்தால் இன்னும் பல நன்மைகளும் ஏற்படுகின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை கடைபிடிப்பதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குளிர்கால முலாம்பழம் ‘வெண் பூசணிக்காய்’ ஆரோக்கிய நன்மைகள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ