ஆரோக்கியத்துக்கு நல்லதா இருந்தாலும் இந்த உணவுகள் ‘உங்களுக்கு’ சரிவராது! எச்சரிக்கும் சிறுநீரகக் கல்!

Kidney Stone And Food Alert : சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டால், உடலின் ரத்த சுத்திகரிப்பு செயல்முறை பாதிக்கப்படும். சிறுநீரகத்தில் கல் இருக்கும் நோயாளிகள், தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்தவேண்டும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 23, 2024, 08:30 AM IST
  • சிறுநீரக கற்கள் இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள்
  • இரத்த சுத்திகரிப்பு செயல்முறையை பாதிக்கும் டயட்
  • எல்லா உணவுகளும் அனைவருக்கும் பொருந்துமா?
ஆரோக்கியத்துக்கு நல்லதா இருந்தாலும் இந்த உணவுகள் ‘உங்களுக்கு’ சரிவராது! எச்சரிக்கும் சிறுநீரகக் கல்! title=

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவே அடிப்படை என்பதால் தான் உணவே மருந்து என்று சொல்வது வழக்கம். ஆனால், சில நோயாளிகளுக்கு குறிப்பிட்ட உணவுகள் எதிரியாக மாறிவிடும்.. அதிலும், சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டால், உடலின் ரத்த சுத்தீகரிப்பு செயல்முறை பாதிக்கப்படும். அதிலும் சிறுநீரகத்தில் கல் இருக்கும் நோயாளிகள், தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

உணவில் கவனம் அவசியம்

சிறுநீரகம் தொடர்பான எந்தவிதமான பிரச்சனை இருந்தாலும், சிக்கலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும் கூட, சில உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. 

சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள்

சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டு துடிபபர்கள். அதுமட்டுமல்ல, அடிக்கடி கழிப்பறைக்கு செல்லும் நிலையும் ஏற்படும். அது இன்னும் கொடுமையாக இருக்கும். வலிக்கும் என்ற எண்ணம் கழிவறைக்கு செல்ல வேண்டாம் என்று தடுக்குபோது, போயே ஆகவேண்டும் என வயிறு உந்தினால் என்ன ஆகும்?

வயிற்று வலி, மன உலைச்சல் என பல பிரச்சனைகள் ஏற்படும் என்றால், பக்கவிளைவாக பசியின்மை, வாந்தி குமட்டல் உணர்வு என பல பிரச்சனைகளை சிறுநீரக கோளாறுகள் ஏற்படுத்தும். இப்படியொரு சூழ்நிலையில் சில உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

இந்த உணவுகள் சிறுநீரக கல் நோயாளிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கலாம், தவறுதலாக கூட இந்த 5 பொருட்களை சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது.

மேலும் படிக்க | வயதான தோற்றத்தை தாமதப்படுத்த இந்த 5 ஆயுர்வேத வைத்தியங்கள் போதும்

ஏனென்றால், தற்போது சிறுநீரக கல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிறுநீரகம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு. இரத்தத்தை வடிகட்டு ம், அதன் முக்கிய செயல்பாடு உடலின் இயல்பான இயக்கத்திற்கு அவசியம் ஆகுக்ம். இரத்த சுத்தீகரிப்பு செயல்முறை நடக்கும் போது கால்சியம், சோடியம் மற்றும் பல வகையான தாதுக்களின் துகள்கள் சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்கு செல்கின்றன.

இந்த பொருட்களின் அளவு அதிகரிக்க ஆரம்பித்து, சிறுநீரகத்தில் அவை குவிந்தால், அந்த படிமம் கல்லாக மாறிவிடுகின்றன. கல்லாக மாறினால், அதை சிறுநீர் வெளியேற்றாமல் அப்படியே விட்டுவிடுகிறது. இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் ஆபத்து அதிகரிக்கலாம்.

சிறுநீரக கற்கள் இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள்

வைட்டமின் சி அடிப்படையிலான உணவுகள்

சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட்டால், வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உணவில் இருந்து விலக்க வேண்டும். ஏனென்றால், வைட்டமின் சி சத்து உள்ள பொருட்கள், பிற உணவுகளைவிட அதிக கற்களை உருவாக்கும் தன்மை படைத்தவை. எலுமிச்சை, கீரைகள், ஆரஞ்சு, கிவி, கொய்யா போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க | வைட்டமின் சி மாத்திரை ஓவர் டோஸ் கூடவே கூடாது... எச்சரிக்கும் நிபுணர்கள்..!

முழு தானியங்கள்

சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்கள் முழு தானியங்களை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். கம்பு, கேழ்வரகு, சோளம், பார்லே, மக்காச்சோளம் போன்ற முழு தானியங்களில் கிளைசெமிக் குறியீடு குறைவு என்பது நல்லது என்றாலும், இவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

உப்பு மற்றும் மசாலாக்கள்

சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்கள் உப்பு மற்றும் உப்பு சேர்த்த திண்பண்டங்களை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும், சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக அளவு சோடியம் உள்ளதால் உப்பை தவிர்ப்பது நல்லது. திண்பண்டங்களில் மசாலா சேர்த்தவற்றில் உப்பு நிச்சயமாக இருக்கும். எனவே, கார உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

சோயா

சோயாபீன்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளில் ஊட்டச்சத்து அதிகமாக இருந்தாலும், சில சோயா தயாரிப்புகளில் ஆக்சலேட் மற்றும்/அல்லது பைடேட்டின் அதிக அளவில் உள்ளன. ஆக்சலேட் என்பது கால்சியம் ஆக்சலேட் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் என்பதால், சோயா பொருட்களை தவிர்ப்பது, சிறுநீரக (Kidney) பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு நல்லது.

அசைவ உணவுகள்

சிறுநீரக கல் இருப்பவர்கள், இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளை குறைத்துக் கொள்ளவேண்டும். அதிக புரதச்சத்துக் கொண்ட உணவு சிறுநீரக நோயாளிகளுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.  

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பாடாய் படுத்தும் கொலஸ்ட்ராலை பட்டென்று கரைக்கும் தேன்! ஆனா கூட்டு சேர ஒரு பொருள் வேணும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News