Health Tips: ‘இந்த’ உணவுகளை பாலுடன் சாப்பிடவே கூடாது; ஏன் தெரியுமா..!!

நமது உடல் ஆரோக்கியத்திற்கு பால் அவசியம். என்றாலும், பாலுடன் சில உணவுகளை உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 25, 2021, 03:18 PM IST
  • நமது உடல் ஆரோக்கியத்திற்கு பால் அவசியம்.
  • சிட்ரஸ் பழங்களை பாலுடன் உட்கொள்ளக்கூடாது.
  • பால் மற்றும் புளிப்பு உணவுகளுக்கு இடையில் குறைந்தது அரை மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.
Health Tips: ‘இந்த’ உணவுகளை பாலுடன் சாப்பிடவே கூடாது; ஏன் தெரியுமா..!! title=

குழந்தை பருவத்திலிருந்தே பால் நமது வாழ்க்கையின் இன்றியமையாத உணவாக இருந்து வருகிறது. பாலில் புரதம், கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின் D உள்ளிட்ட பிற சத்துக்கள் நிறைந்து உள்ளன. உணவில் பால் சேர்ப்பதன் மூலம் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கின்றன. உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான பால் நம் எலும்புகளை பலப்படுத்துகிறது.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு பால் அவசியம். என்றாலும், பாலுடன் சில உணவுகளை உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி,  அலர்ஜி மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இது போன்ற சில உணவுகளைப் பற்றி  நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.

தயிர், மோர் அல்லது புளிப்பு உணவுகள்

தயிர், மோர் அல்லது புளிப்பு உணவுகளை ஒரு போதும் பாலுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்று கோளாறு, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பால் மற்றும் புளிப்பு உணவுகளுக்கு இடையில் குறைந்தது அரை மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். நீங்கள் விருந்துக்குச் சென்றாலும்  கூட,  தயிர் பச்சடி மற்றும் பாயசம் என இரண்டுமே விருந்தில் இருந்தால், அவற்றில் ஒன்றை மட்டுமே சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ALSO READ | பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! மைதா எலும்புகளை பலவீனமாக்கும்; எச்சரிக்கை!

வாழைப்பழமும் பிரச்சனையை  ஏற்படுத்தலாம்

எடை அதிகரிக்க, பெரும்பாலும் பாலுடன் வாழைப்பழங்களை சாப்பிட்டால் நல்லது என பலர் பரிந்துரைக்கின்றனர். ஆனால் வாழைப்பழங்கள் பாலுடன் பால் சேரும் போது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வாழைப்பழ ஷேக்கை அருந்தும்போது, ​​செரிமானத்திற்கு ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் பொடியைப் பயன்படுத்தினால், வயிற்று பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

ALSO READ | Brain Foods: ஞாபக சக்தி அதிகரிக்க இந்த ‘5’ உணவுகள் அவசியம்

அசைவ உணவுகள்  

அசைவ உணவுகளை குறிப்பாக மீன் வகை உணவுகளை சாப்பிட்ட பிறகு பால் சாப்பிடுவது நல்லதல்ல. இது உங்கள் செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதனால், அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களை பாலுடன் உட்கொள்ளக்கூடாது. இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளன. எனவே, இதை பாலுடன் சேரும் போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும்.

ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News