Health Tips: நம்மில் பலருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய கவலை உடல் எடையை குறித்து தான். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். அதற்கு காரணம் சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல், என்னவெல்லாம் கிடைக்கிறதோ, அதையெல்லாம் எந்தவித கவலையும் இன்றி சாப்பிடுகிறோம். அடுத்து கொஞ்ச நாளில் உடல் எடைக்கூடி, மிகவும் குண்டாக மாறிவிடுவோம். உடனே உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிலர் மூன்றுவேளையும் சரியாக சாப்பிடாமல் உணவுகளை தவிர்ப்பார்கள். அதுவும் தவறு.
உங்கள் உடலுக்கு ஏற்ற சரியான உணவை நேரத்திற்கு நேரம் சாப்பிட்டால் போதும், உங்கள் உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம். அப்படி செய்தால் உடல் எடை கூடுவதை தவிர்க்கலாம். உங்கள் உடம்பு நல்ல ஆரோக்கியத்துடன் "பிட்"டாக இருக்கும்.
ALSO READ | Weight Loss in Ayurveda: உடல் எடை குறைப்புக்கு ஆயுர்வேதம் சொல்வது என்ன?
உடல் எடை குறைக்க சில வழிகள்:
- ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன், அரை எலுமிச்சை சாறு கலந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடல் எடையை நன்றாக குறைக்கலாம்.
- சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
- அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
- கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
- தினமும் காலையில் நன்கு வளர்ந்த 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உங்கள் உடல் எடையில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
- சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும்.
- உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாகும்.
ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR