இன்றைய காலகட்டத்தில், அவசர கதியில் வாழ்க்கையை ஓட்டும் நம்மில் பலருக்கு, வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. சில சமயங்களில், நேரத்தை மிச்சப்படித்த, திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு (Health) மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்:
கீரை (Spinach): பழைய கீரை உணவை ஒரு போதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது ஏனெனில் சூபடுத்துவதால், அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து போகும். அதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
முட்டை (Egg): முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். முட்டைகளில் (Egg) புரதச்சத்து மிக அதிகமாக உள்ளது. இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, அதில் உள்ள புரத சத்தின் கூறுகள் முற்றிலும் மாறுபடும். அதனால், அது விஷமாக மாறும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.
ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்
உருளைக்கிழங்கு (Potato): உருளைக்கிழங்கு நாம்அதிகம் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று எனலாம். நம்மில் பலர், அடுத்த நாள் தேவைக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து பிரிட்ஜில் வைக்கிறோம். அது மிகவும் தவறு. உருளைக்கிழங்கு சேத்த பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டு சூடாக்குவதன் மூலம், அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும் என்பதோடு, இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.
பீட்ரூட் (Beetroot) : பழைய பீட்ரூட் உணவை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்கின்றனர். கீரையை போலவே, பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டும் சூடுபடுத்துதலால், அழிந்து போகிறது.
சிக்கன் (Chicken): பழைய சிக்கன் (Chicken) உணவை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதில் உள்ள புரத சத்தின் கூறுகள் முற்றிலும் மாறுபடும். இது உங்களுக்கு கடுமையான செரிமான பிரச்சினைகளையும் வயிற்று பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
சாதம் (Rice): சாத்தையும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது கடும் புடல் நல பாதிப்பௌ ஏற்படுத்தும். ஆனால், தண்ணீர் விட்ட பழைய சாதம் உடலுக்கு மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR