Diabetes Control Tips: இன்றைய நவீன உலகில் பலரிடம் காணப்படும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆரோக்கியமாக இருக்க தினமும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அனைத்து பழங்களின் சாறும் உடலுக்கு நன்மை பயக்குமா?
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த பழங்களை ஜூஸ் செய்து குடிக்கலாம்? ஆரஞ்சு போன்ற பழங்களின் சாறுகளை பெரும்பாலும் மக்கள் விரும்பி குடிக்கிறார்கள். ஆனால் இந்த பழங்களின் சாறு நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இப்படி சில முக்கிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சில பழச்சாறுகள் சர்க்கரை அளவை அதிகரிக்க உதவுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிக அளவு சர்க்கரை மற்றும் நார்ச்சத்து கொண்ட பழங்கள் இவற்றில் முக்கியமானவை. நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாறு வடிவில் சாப்பிட்டால், அவற்றில் சர்க்கரை மட்டுமே மிச்சமிருக்கும். ஆகையால், அத்தகைய பழங்களின் சாற்றை உட்கொள்வது எந்த வகையிலும் ஆரோக்கியத்திற்கு பயனளிக்காது.
நீரிழிவு நோயாளிகள் எந்த பழச்சாறுகளை குடிக்கக்கூடாது?
ஆரஞ்சு: ஆரஞ்சு பழச்சாறு நார்ச்சத்து இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. இது சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர சத்துக்கள் இருந்தாலும், அதன் சாறு சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஆகையால், ஆரஞ்சு பழத்தை நேரடியாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | பொடுகு தொல்லை பாடாய்படுத்துகிறதா? இனி கவலைப்படாதீங்க
அன்னாசிப்பழம்: அன்னாசிப் பழச்சாறும் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். இந்த பழம் வைட்டமின் சி -இன் ஒரு ஆதாரமாக உள்ளது. ஆனால் அதை பிழிந்து சாறு குடிப்பதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
ஆப்பிள்: ஒரு நாளைக்கு 1 ஆப்பிளை சாப்பிட்டால், அது உங்களை நோய்களில் இருந்து காக்கிறது. ஆனால் இந்த நாட்களில் ஆப்பிள் ஜூஸ் மிகவும் பொதுவானதாகிவிட்டது. மக்கள் அதை விரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆப்பிளை பழமாக சாப்பிடுவது நல்லது.
இவற்றின் சாறு குடிப்பது நன்மை பயக்கும்
- இஞ்சி: இஞ்சி சாறு குடிப்பது நீரிழிவு நோயாளிகள் மற்றும் அனைவருக்குமே நன்மை பயக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் சாறு கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது.
- சுரைக்காய்: சுரைக்காய் சாறு குடிக்கலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் நீரேற்றத்தை நிறைவு செய்கிறது. இன்சுலின் அளவை அதிகரிக்க அனுமதிக்காது.
- வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் புதினா இலைகள் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து கலந்து அதன் சாறு எடுத்து குடித்து வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொய்யா பழத்தை வறுத்து சாப்பிட்டால், 5 பிரச்சனைகள் வராது...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ