புதுடெல்லி: பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை என்றாலும் அவற்றில் சில வேறு எந்த பழத்துடனும் ஒப்பிடவே முடியாதவை. விதவிதமான பழங்கள் இருந்தாலும், இந்த ஒரு பழம் இல்லையா என்று ஏங்கும் பழங்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது திராட்சைப்பழம்.
திராட்சைப்பழத்தை பழமாகவும், உலர வைத்து உலர் பழமாகவும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். பலவிதமான திராட்சைப் பழங்கள் இருந்தாலும் பொதுவாக கருப்பு, வெளிர் பச்சை, அடர் ஊதா என மூன்று நிறங்களில் காணப்படுபவை திராட்சை.
திராட்சையை பழமாகவும், உலர்பழமாகவும் சாப்பிடும்போது கிடைக்கும் நன்மைகளுக்கும், அதையே பழச்சாறாக அருந்துவதற்கும் உள்ள ஆரோக்கிய நன்மைகள் மாறுபடுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தியாக உள்ள திராட்சை, பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். சுவையான பழங்களில் ஒன்றான திராட்சையை ஜூஸாக மாற்றி குடிக்கும்போது நார்சத்து குறைந்துவிடுகிறது. இருந்தாலும் பழமாக சாப்பிட முடியாவிட்டாலும் ஜூஸாக குடிப்பதால், திராட்சையில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சக்திகள் கிடைக்கும்.
ஒரு கிளாஸ் திராட்சை சாறு உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
சிகப்பு ஒயின் மற்றும் ஊதா திராட்சைகளில் உள்ள ஃபிளாவனாய்டுகள் கரோனரி இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இருதய ஆபத்தை குறைக்கிறது. ஒரு கிளாஸ் ஊதா திராட்சை சாறு, எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் அது உதவுகிறது.
மேலும் படிக்க | சாப்பிட்ட பின் வாக்கிங் போகலாமா; நிபுணர்கள் கூறுவது என்ன
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
ஒரு கிளாஸ் ஊதா திராட்சை சாறு நடுத்தர வயதுடையவர்களில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திராட்சை சாறு பருகுவதால் வைட்டமின் சி அளவும் அதிகரிக்கிறது.
இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது
திராட்சை சாறு பிளேட்லெட் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம் இதயத்தில் அடைப்புகளைத் தடுக்க உதவுகிறது. இதயத்தில் அடைப்புகளை ஏற்படுத்தும் பிரச்சனைகளை திராட்சைப் பழச்சாறு குறைக்கிறது. இது, தமனிகளில் முழு பிளேட்லெட் திரட்டுதல் குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
மூலக்கூறு ஊட்டச்சத்து மற்றும் உணவு ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சிவப்பு திராட்சை சாறு உள்ளவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரிகள் மற்ற பழச்சாறுகள் அல்லது மருந்துகொண்டவர்களுடன் ஒப்பிடும்போது அமிலத்தன்மை குறைவாக இருப்பதாகக் கூறியது. ஒரு கிளாஸ் சிவப்பு திராட்சை சாறு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது
திராட்சை மற்றும் திராட்சை சாற்றில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இதய தசைகள் ஓய்வெடுக்க உதவுகின்றன, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன, எனவே ரத்தக் கொதிப்பு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் இத்தனை தீமைகளா, அசர வைக்கும் தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR