Constipation: மலச்சிக்கல் பிரச்சனையா? டோண்ட் வொர்ரி! மலச்சிக்கலுக்கு தீர்வு சொல்லும் பழங்கள்

Fruits For Constipation: மலச்சிக்கல் உண்டாக உணவே காரணமாக இருக்கிறது. நமது உடலில் உள்ள கழிவுகள், இலகுவாக மலம் மூலம் வெளியேறுவதற்கு நமது உணவு பழக்கவழக்கங்களை சரி செய்து கொள்வது அவசியம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 20, 2024, 08:53 AM IST
  • மலச்சிக்கல் உண்டாக காரணமாகும் உணவுகள்
  • உடலின் கழிவுகளை வெளியேற்றும் பழங்கள்
  • மலச்சிக்கலுக்கு சிக்கல் கொடுக்கும் ‘5’ பழங்கள்
Constipation: மலச்சிக்கல் பிரச்சனையா? டோண்ட் வொர்ரி! மலச்சிக்கலுக்கு தீர்வு சொல்லும் பழங்கள் title=

வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இவற்றில் மலச்சிக்கலும் ஒன்று. சரியான நேரத்தில் மலச்சிக்கலை கவனித்து சரி செய்யா விட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. உணவு விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நாள்பட்ட மலச்சிக்கல் நீண்டகாலம் நீடிப்பது என்பது சில உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும் மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே தடுப்பது முக்கியம். மலச்சிக்கல் என்பது நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆன பிறகு, உடல் உருவாக்கும் கழிவு, உடலில் இருந்து மலம் மூலம் வெளியேறாமல் தங்கும் போது ஏற்படும் ஒரு நிலையாகும். மலச்சிக்கல் உண்டாக உணவே காரணமாக இருக்கிறது. நமது உடலில் உள்ள கழிவுகள், இலகுவாக மலம் மூலம் வெளியேறுவதற்கு நமது உணவு பழக்கவழக்கங்களை சரி செய்து கொள்வது அவசியம் ஆகும்.

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் தானியங்கள் மட்டுமல்ல, பல பழங்களிலும் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இவை மலத்தை மென்மையாக்கி வெளியேற்றும். இது மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையை போக்குகிறது. எனவே பழங்களை அதிகமாக உண்பது. வயிற்றில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும்.

பழங்களை, தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை (Health Tips) நீங்கும். அந்த வகையில் இந்த ஐந்து பழங்களும் மலச்சிக்கலை போக்கும் அற்புதமான குணங்களைக் கொண்டவை ஆகும்.

மேலும் படிக்க | ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.. மெக்னீசியம் நிறைந்த ‘சூப்பர்’ உணவுகள்!

வயிற்றை சுத்தம் செய்யும் சிறந்த பழங்கள்
 மலச்சிக்கலைத் தடுக்கும் பப்பாளி (Papaya For Constipation)
பப்பாளி வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். மலச்சிக்கல் ஏற்பட்டால் பப்பாளி கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். இதில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கவும் உதவுகிறது. பப்பாளியை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் (Apple For Constipation)
ஆப்பிள்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆப்பிள் பழத்தில் உள்ள பெக்டின் குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. ஆனால் அதற்கு ஆப்பிளை எப்போதும் அதன் தோலுடன் உட்கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு (Orange For Constipation)
மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமான செயல்முறையை வலுப்படுத்த உதவுகிறது. குடலில் படிந்துள்ள அழுக்குகளை துரிதமாக வெளியேற்றும் ஆரஞ்சுப் பழத்தில்  நரிங்கெனின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளது, இது மலச்சிக்கலைப் போக்க உதவும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! நுரையீரல் ரொம்ப வீக்கா இருப்பதை உணர்த்தும் ‘சில’ அறிகுறிகள்!

பேரிக்காய் (Pear For Constipation)
பேரிக்காய் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த உதவும். பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள பேரிக்காயில், நார்ச்சத்து, பிரக்டோஸ் மற்றும் சர்பிட்டால் போன்ற கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன, இது குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது. பேரிக்காயை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
கிவி (Kiwi For Constipation)
கிவியில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளதால், இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது. கிவி பழத்தில் உள்ள ஆக்டினிடின் என்ற என்சைம் புரதங்களை உடைக்க உதவுகிறது. அதுமட்டுமல்ல, கிவிப் பழம் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவும். வயிற்றை சுத்தம் செய்ய உதவுவதில் கிவி முக்கிய வகிக்கும்.

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மது அருந்துவதை நிறுத்தினால் வரும் பக்கவிளைவுகள்! இதுக்கு தான் குடிமகன்கள் பயப்படறாங்களோ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News