இரண்டு முறை பல் தேய்த்தும் மஞ்சள் கறை போகவில்லையா... இதை செய்து பாருங்கள்!

Home Remedy To Get White Teeth: மஞ்சள் படிந்த உங்களின் பற்களை முத்துப் போல் பளபளவென வெண்மையாக மாற்ற, ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் குறித்து இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 8, 2023, 07:46 AM IST
  • பற்களை வெண்மையாக வைத்திருக்க பல் துலக்குவது மட்டும் போதாது.
  • கால்சியம் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
  • மேலும், எள் போன்ற விதைகளும் இதில் உங்களுக்கு கைக்கொடுக்கும்.
இரண்டு முறை பல் தேய்த்தும் மஞ்சள் கறை போகவில்லையா... இதை செய்து பாருங்கள்! title=

Home Remedy To Get White Teeth: பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ளவும், துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கவும் மக்கள் பல வழிகளை நாடுகின்றனர். பல்பொடி, மௌத் வாஷ், பற்பசை  என பலவற்றின் மூலம் வாயையும், பற்களையும் சுத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்கின்றனர். இருப்பினும், சில விஷயங்களை முறையாக பின்பற்றாவிட்டால் பற்கள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்பதை நினைவிக் கொள்ள வேண்டும். 

உதாரணத்திற்கு, நீங்கள் உணவை முறையாக எடுத்துக்கொள்ளாவிட்டால், வயிறு பாதிக்கப்பட்டு வாயில் துர்நாற்றம் மட்டுமின்றி, பற்களில் கறையும் படியும் என பொதுவாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பற்களில் வழி ஏற்பட்டால் உங்களால் எளிதாக தாங்கிக்கொள்ளவே இயலாது. அந்த வகையில், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகிறது. 

பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள நாம் அனைவரும் தினமும் பல் துலக்குவதை வாடிக்கையாக வைத்திருப்போம், குறிப்பாக சிலர் ஒரு நாளில் இரண்டு முறையும் பல் துலக்குவதை நாம் காண முடியும். ஆனால் அப்படி பல முறை துலக்கியும் பற்களின் மஞ்சள் நிறம் மட்டும் மறைவதில்லை என புகார் வருவதையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். பற்களில் மஞ்சள் கறை படிந்திருப்பது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மக்கள் முன் வெளிப்படையாக சிரிக்க பயப்படுகிறோம். 

மேலும் படிக்க | உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க.... உணவுகளும் பழக்கங்களும்.!

இதற்கு என்ன மாற்று, இதனை சரியாக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்?, பற்களின் மஞ்சள் நிறத்தை எவ்வாறு அகற்றுவது? இதனை சிறு வீட்டு வைத்தியத்தின் மூலமே சரியாக்கலாமா என பலரும் யோசித்திருப்பீர்கள். அந்த வகையில், மஞ்சள் கறை படிந்திருக்கும் உங்கள் பற்களை முத்து போல் பளபளப்பாக மாற்ற வேண்டுமானால், வீட்டிலேயே முயற்சி செய்யத்தக்க ஒரு நல்ல செய்முறையை இங்கு காணலாம். இந்த செயல்முறை குறித்து வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். பற்களை வெண்மையாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்.

பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க, துலக்குதல் மட்டும் போதாது. கால்சியம் நிறைந்த உணவை உட்கொள்வது மற்றும் எள் போன்ற விதைகளை உட்கொள்வது போன்ற வேறு சில நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும். பற்கள் பளபளப்பாகவும், ஈறுகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எள் உங்களுக்கு உதவுகிறது. வறுத்த எள்ளை காலையில் மென்று சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். இதற்குப் பிறகு, பற்பசை அல்லது பற்பசை இல்லாமல் மென்மையான பல் துலக்குதல் மூலம் பல் துலக்க வேண்டும். 

எள்ளால் என்ன பயன்?

எள்ளில் கால்சியம் அதிகம் இருப்பதால், பற்களை வலுப்படுத்த உதவுகிறது. கால்சியம் பற்களின் பற்சிப்பியை பலப்படுத்துகிறது, இது பற்களை சிதைவில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, எள்ளில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மெக்னீசியம் ஈறுகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, பாஸ்பரஸ் ஈறுகளை பலப்படுத்துகிறது. மேலும், பற்களை வெண்மையாக்குவதிலும் எள் சிறப்பான பங்களிப்பை அளிக்கத்தக்கது. எள்ளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது பற்களை பாக்டீரியா சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது பற்கள் மஞ்சள் நிறமாவதையும் தடுக்கிறது.

(பொறுப்பு மறுப்பு: அன்புள்ள வாசகரே, எங்களின் இந்தச் செய்தியைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் எடுத்துள்ளோம். உங்கள் உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்கும் படித்தால், அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.)

மேலும் படிக்க | வாழைப்பழத்தில் இத்தனை மேஜிக் இருக்கா..? ‘இந்த’ 7 நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News