மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொலஸ்டிராலை எரிக்கும் ‘சில’ உணவுகள்!

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, ரத்தத்தில் அதிக கொலஸ்டிரால் என்பது அநேகருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகவே உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 26, 2022, 09:35 PM IST
மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொலஸ்டிராலை எரிக்கும் ‘சில’ உணவுகள்! title=

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, ரத்தத்தில் அதிக கொலஸ்டிரால் என்பது அநேகருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. உடலில் LDL என்னும் கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகி, HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைந்து கொண்டே போகும் போது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்க வாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தற்போது பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் இந்த பிரச்சனைகளுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு தான் என்கிறார்கள் நிபுணர்கள். 

எண்ணெய் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால், பெரும்பாலானோருக்கு கொலஸ்டிரால் அதிகரிக்கிறது. ஆனால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, பல்வேறு வகையான உணவு விதிகளை பின்பற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, உணவு உட்கொள்ளலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உணவில் சிறிய மாற்றங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு உணவு விதிகளை பின்பற்ற வேண்டும். நிபுணர்கள் காய்கறிகள் மற்றும் பிற சத்தான உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பச்சைக் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

மஞ்சள்:

மஞ்சள் உடலுக்கு மிகவும் நல்லது. இது பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால், இரவில் படுக்கும் முன் மஞ்சள் கலந்த பாலைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ரால் எளிதில் கரைந்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

காய்கறிகள்:

காய்கறிகள் உடலுக்குத் தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. குறிப்பாக இவற்றை தினமும் உட்கொண்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலை எளிதில் கரைத்துவிடும். ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

பூண்டு:

உடலுக்கு உற்சாகம் அளிக்கும் பல ஊட்டச்சத்து மதிப்புகள் பூண்டில் உள்ளன. இவற்றை உட்கொள்வதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள் எளிதில் குறையும். மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. இவற்றை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சிட்ரஸ் பழங்கள்:

ஆப்பிள்கள், பெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவை சிட்ரஸ் பழங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை தினமும் உட்கொள்வதால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைப்பது மட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் எளிதில் கட்டுப்படுத்துகிறது. எனவே, உடல் எடை அதிகரிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நொறுக்குத் தீனி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? உண்மை என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

Trending News