இந்தியாவின் முதல் COVID-19 நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று

2020 ஜனவரி 30 ஆம் தேதி தான் வுஹான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது, செமஸ்டர் விடுமுறையைத் தொடர்ந்து வீடு திரும்பிய சில நாட்களுக்குப் அவர்,  நாட்டின் முதல் COVID-19 நோயாளி ஆனார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2021, 04:33 PM IST
இந்தியாவின் முதல் COVID-19 நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று title=

 

இந்தியாவின் முதல் COVID-19 தொற்று பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் மருத்துவருக்கு, மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) கேரளாவின் திருச்சூரில் தெரிவித்தனர். "அவருக்கு COVID-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவரது RT-PCR பரிசோதனை பாஸிடிவ் என வந்துள்ளது, ஆன்டிஜென் பரிசோதனை நெகடிவ் என வந்துள்ளது. அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை" என்று திருச்சூர் DMO டாக்டர் கே ஜே ரீனா PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

படிப்பு காரணங்களுக்காக புதுடெல்லி செல்ல தயாராக இருந்ததால் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது RT-PCR பரிசோதனை பாஸிடிவ் என வந்துள்ளது. அந்தப் பெண்மணி தற்போது வீட்டில் இருக்கிறார் என்றும், அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

ALSO READ | Corona Nasal Vaccine: மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி, ஒரு மைல்கல்லாக இருக்குமா..!!!

2020 ஜனவரி 30 ஆம் தேதி தான் வுஹான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று உறுதியானது, செமஸ்டர் விடுமுறையைத் தொடர்ந்து வீடு திரும்பிய சில நாட்களுக்குப் அவர்,  நாட்டின் முதல் COVID-19 நோயாளி ஆனார்.

திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிட்டத்தட்ட மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு, குணமடைந்தார். மேலும் பிப்ரவரி 20, 2020 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ALSO READ: அச்சுறுத்தும் Zika Virus, அதிகரிக்கிறது எண்ணிக்கை: அறிகுறிகள், சிகிச்சை என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News