Cholesterol Control Tips: இன்றைய அவசர காலகட்டத்தில் பல வித நோய்கள் மனிதர்களை ஆட்கொள்கின்றன. இவற்றில் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், யூரிக் அமிலம், ஒற்றைத் தலைவலி, மூட்டு வலி ஆகியவை பற்றி அதிக அளவில் கேள்விப்படுகிறோம். இவற்றில் பெரும்பாலான நோய்களுக்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையே காரணங்களாக அமைகின்றன. நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் கண்டிப்பாக இவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும், இவற்றை கட்டுப்படுத்தவும் முடியும்.
உயர் கொலஸ்ட்ரால்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் அதனால் பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், இதய கோளாறுகள் என பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆகையால் இந்த நோய்கள் வராமல் தடுக்க, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். கொலஸ்ட்ராலை திறம்பட கட்டுப்படுத்த, சமச்சீரான உணவை உட்கொள்வது மிக முக்கியம். சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க முடியும். இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உயர் கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்:
பாதாம் (Almonds):
பாதாமில் புரதச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற 15 ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பாதாம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக பார்க்கப்படுகின்றது. தினசரி உணவில் பாதாமை சேர்த்துக்கொள்வது எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு, இதயத்தை சேதப்படுத்தும் வீக்கத்தையும் குறைக்கிரது. பாதாம் சாப்பிடுவது எஸ்டிஎல் கொழுப்பை மேம்படுத்துகிறது. இதன் மூலம் தொப்பை கொழுப்பை குறைக்க முடியும். இவை அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
மேலும் படிக்க | இடைவிடாத இருமலா... இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க..!!
முழு தானியங்கள் (Whole Grains):
உணவில் முழு தானியங்களையும் சேர்த்துக்கொள்வது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது இதய நோய் அபாயத்தை குறைத்து, எடையை குறைக்கவும் உதவுகின்றது. இது எல்டிஎல் கொழுப்பின் அளவையும் குறைக்கின்றது. முழு தானியங்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.
ஓட்ஸ் (Oats):
ஓட்ஸில் நார்ச்சத்தும் அதிக ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதை காலை உணவில் உட்கொண்டால் நாள் முழுதும் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.
பழங்கள் (Fruits):
பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளது. இதில் கொலஸ்ட்ரால் அளவு மிக குறைவாக இருப்பதால், இது லிப்பிட் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும். பழங்கள் கொலஸ்ட்ராலைக் குறைப்பது மட்டுமல்லாமல், பசியைக் கட்டுப்படுத்தவும், எடையை பராமரிக்கவும் உதவுகின்றன. காலை உணவில் தினமும் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். பழங்களில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்பௌத்துகின்றன.
பூண்டு (Garlic):
தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கும். பூண்டை பல வகைகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகளால் பல வித உடல் உபாதைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்தியாவில் 54% பேருக்கு உடல் பருமன்... அதிர்ச்சி அளிக்கும் காரணம் இது தான்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ