Summer Fruit: பார்க்கவும் அழகு! ஆரோக்கிய பண்பிலும் ஏ ஒன்! லிச்சிக்கு நிகர் லிச்சியே

Litchi Health Benefits In Summer: பார்ப்பதற்கே அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும் லிச்சி பழம், விழுதி அல்லது விளச்சி என்றும் அழைக்கப்படுகிறது. அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவைமிக்க கனி இது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 7, 2023, 08:18 AM IST
  • அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவைமிக்க கனி லிச்சி
  • பார்க்கவும் அழகு! ஆரோக்கியத்திலும் சூப்பர்
  • ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் லிச்சி
Summer Fruit: பார்க்கவும் அழகு! ஆரோக்கிய பண்பிலும் ஏ ஒன்! லிச்சிக்கு நிகர் லிச்சியே title=

பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள லிச்சி பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். எனவே, லிச்சி பழம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தசோகை நோய் ஏற்படாது. ஏனென்றால், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதால், ரத்தசோகை ஏற்படும் அபாயம் குறைகிறது.

அது மட்டுமல்ல, உடல் எடையை துரிதமாக குறைக்க லிச்சி பழம் உதவுகிறது. லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த இனிப்புப் பழம் உதவுகிறது. 

கோடையில் லிச்சி

அதுமட்டுமல்ல, நீர்ச்சத்து நிறைந்துள்ள லிச்சியை கோடையில் சாப்பிடுவது பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும். வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்த விரும்புபவர்கள், இந்த சிவப்பு பழத்தை சாப்பிட்டு அற்புத பலன்களைப் பெறலாம்.

மேலும் படிக்க | நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் ஏழு சூப்பர் உணவுகள்

கோடை காலத்தில் லிச்சியை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

கோடை காலம் வந்தவுடன் பல வகையான பழங்கள் சந்தைக்கு வரத் தொடங்கும். லிச்சி ஒரு பருவகால பழமாகும். கோடையில் உடல் எடையை குறைக்க நீங்கள் திட்டமிட்டால், லிச்சி உங்களுக்கு சிறந்த பழமாக இருக்கும். லிச்சி சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். இதன் மூலம் வளர்சிதை மாற்றமும் வலுப்பெறுகிறது.

உடல் எடையைக் குறைக்கும் லிச்சி

லிச்சி சாப்பிடுவதால் உடல் எடை மிக விரைவாக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தவிர, லிச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகளை தெரிந்து கொள்வோம்...

கோடையில் லிச்சி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

லிச்சி பழச்சாறு நிறைந்த பழம். லிச்சியில் 80 சதவீதம் வரை நீரேற்றம் உள்ளது. கோடையில் ஆரோக்கியமாக வைத்திருக்க லிச்சி உதவுகிறது. இனிப்பு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த லிச்சி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நார்ச்சத்து கொண்ட பழம்

லிச்சியில் நல்ல அளவு நார்ச்சத்து மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்தும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. லிச்சி இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நல்ல அளவு பொட்டாசியம் இருப்பதால் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மேலும் படிக்க | உடல் பருமன் கரைய... ‘இந்த’ சத்தான பிரெட்கள் உங்கள் டயட்டில் இருக்கட்டும்

லிச்சி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வைட்டமின் சி இதில் நல்ல அளவில் காணப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு லிச்சி ஒரு நல்ல பழம், இதன் காரணமாக அவர்களின் உடலில் இரும்புச்சத்து அதிகமாகும், இது தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. 

லிச்சி சாப்பிடுவது பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதேபோல, லிச்சி சாப்பிடுவது தொற்று அபாயத்தை குறைக்கிறது, தொண்டை புண், காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

சரும பாதுகாப்பிற்கும் லிச்சி நன்மை பயக்கும். லிச்சி சாப்பிட்டால் சருமம் பளபளக்கும். லிச்சி சாப்பிடுவது ஒருவரின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, காதல் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க | ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் சோள உப்புமா... தயாரிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News