எச்சரிக்கை! ‘இந்த’ காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்!

சாலட்களை சரியான அளவில், சரியான வகையில் எடுத்துக் கொள்ளும் போது புத்துணர்ச்சி அளிப்பதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 18, 2023, 09:26 PM IST
  • அனைத்து காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட கூடாது.
  • சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  • பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
எச்சரிக்கை! ‘இந்த’ காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்! title=

பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதிலும் சாலட் பெரும்பாலானோரின் ஆரோக்கிய தேர்வாக உள்ளது. ஆனால், அனைத்து காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட கூடாது. சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

பச்சைக் காய்கறிகளை. சரியான அளவில் உட்கொண்டால், உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தாது. சாலட்களை சரியான அளவில், சரியான வகையில் எடுத்துக் கொள்ளும் போது புத்துணர்ச்சி அளிப்பதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. சாலட் உங்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க ஒரு சிறந்த வழி என்கிறார்கள் நிபுணர்கள். எனினும் அளவிற்கு மிஞ்சும் போது அமுதமும் நஞ்சு என கூறுவதுண்டு. மேலும், சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது, நன்மைக்கு பதிலாக தீமையையே கொண்டு வந்து சேர்க்கும்.

வெண்டைக்காய்

சிலர் வெண்டைக்காயை கூட பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் பச்சை வெண்டைக்காய் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். செரிமான அமைப்பை பாதிக்கும். கடுமையான வயிற்று வலி, வாய்வு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! மன ஆரோக்கியத்தை பாதிக்கும் ‘துத்தநாக’ குறைப்பாடு!

கீரை மற்றும் ப்ரோக்கோலி

சிலர் கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை, சமைக்காமல் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இந்த காய்கறிகளை தொடர்ந்து பல நட்களுக்கு பச்சையாக சாப்பிட்டால் சிறுநீரகத்தை பாதிக்கலாம்.

கத்திரிக்காய்

கத்தரிக்காயை பச்சையாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. சமைக்கப்படாத கத்திரிக்காயை சாப்பிடுவது வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பொதுவாக பச்சையாக யாரும் சாப்பிடுவதில்லை. ஆனால் தற்போது சிலர் உருளைக்கிழங்கையும் பச்சையாக சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உருளைக்கிழங்கை பச்சையாக சாப்பிடுவது பல நோய்களை உண்டாக்கும். சமைக்காத உருளைக்கிழங்கில் சோலனைன் என்ற சிறப்பு வகை நச்சு உள்ளது. இது தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னம்... சில ‘எளிய’ தீர்வுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News