மூட்டுவலி - அஜீரணக்கோளாறுக்கு காரணமான இந்த உணவை சாப்பிடாதீர்கள்

இந்த உணவை அன்றாட உணவில் நீங்கள் சாப்பிட்டால் மூட்டுவலி மற்றும் அஜீரணக்கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 09:39 AM IST
மூட்டுவலி - அஜீரணக்கோளாறுக்கு காரணமான இந்த உணவை சாப்பிடாதீர்கள் title=

உளுந்து சாப்பிடுகிறீர்கள் என்றால், கவனமாக இருங்கள். பருப்பு வகைகள் புரதத்தின் சிறந்த ஆதாரமாக இருந்தாலும், இதுபோன்ற பல பருப்பு வகைகள் பிரச்சனை ஏற்படவும் காரணமாக இருக்கின்றன. கருப்பு உளுத்தம் பருப்பு சாப்பிடுவது ஒன்றல்ல பல வகையான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே கருப்பு உளுத்தம் பருப்பை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

யூரிக் அமில பிரச்சனை 

கருப்பு உளுத்தம் பருப்பை அதிகமாக உட்கொள்வது யூரிக் அமில பிரச்சனையை அதிகரிக்கும். உங்கள் ரத்தத்தில் ஏற்கனவே யூரிக் அமிலம் அதிகரித்திருந்தால், அதை உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் இதை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கல்சிஃபிகேஷன் கற்கள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | வேகவைத்த ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

மூட்டுவலி பிரச்சனை 

உளுத்தம் பருப்பை உட்கொள்வது மூட்டுவலி பிரச்சனையை அதிகரிக்கும். உங்களுக்கு ஏற்கனவே மூட்டுவலி பிரச்சனை இருந்தால், உளுத்தம் பருப்பை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கலாம்.

அஜீரண பிரச்சனை 

அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இந்த உளுந்து சாப்பிடுவதில் இருந்து சற்று விலகி இருங்கள். ஏனெனில் இந்த பருப்பு மலச்சிக்கல் பிரச்சனையை அதிகரிக்கும். இது வயிற்றில் வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | வெயிலில் வெள்ளரிக்காய் தரும் வேற லெவல் நன்மைகள் இதோ

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News