ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலானோர் நாளுக்கு நாள் உடல் பருமனாகி வருகின்றனர். உடல் பருமன் என்பது உடலை நோய்களின் கூடாரமாக ஆக்கி விடும். உடலில் சேர்ந்துள்ள கொழுப்பையும் மற்றும் தொப்பையையும் குறைப்பது மிகவும் சவாலானது தான். அதற்கு தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். தவறாமல் பயிற்சி செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு தேவை. இருப்பினும், பலருக்கு எடையை குறைப்பதில், முக்கியமாக, தொப்பையை கரைக்கும் ஆற்றல் பெற்ற பயனுள்ள எடை இழப்பு பயிற்சிகள் குறித்து அதிகம் தெரிவதில்லை. சில எளிய பயிற்சிகளை வீட்டிலேயே தொடர்ந்து செய்வதன் மூலம், நீங்கள் படிப்படியாக உடல் பருமனை குறைக்கலாம். உடல் பருமனை போக்க வீட்டிலேயே என்னென்ன பயிற்சிகளை செய்யலாம் என்று பார்ப்போம்.
ஸ்கிப்பிங் பயிற்சி:
முதலில் நீங்கள் ஸ்கிப்பிங் விளையாடத் தொடங்குங்கள். கயிற்றின் உதவியுடன் ஆடப்படும் ஸ்கிப்பிங் உடலை மேம்படுத்துகிறது, தொப்பை கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் வயிற்று தசைகளை ஸ்ட்ரெச் செய்து, இது உடலை இறுக்கமாக்குகிறது. நாளின் எந்த நேரத்திலும் ஸ்கிப்பிங் செய்யலாம். இது மிகவும் எளிதான உடற்பயிற்சி. முதலில் குறைவான எண்ணிக்கையில் தொடங்கி, இந்தப் பயிற்சியை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்குங்கள். தினமும் ஸ்கிப்பிங் செய்வது உங்கள் உடல் பருமனை (Weight Loss Tips) விரைவில் குறைக்கும்.
படிக்கட்டுகளில் ஏறுவதும் இறங்குவதும்:
படிக்கட்டுகளில் ஏறுவதும் இறங்குவதும் ஒரு சிறந்த உடற்பயிற்சி. படிக்கட்டுகளில் ஏறுவதன் மூலம் உடல் பருமனை எளிதில் குறைக்கலாம். நீங்கள் எங்காவது வெளியே செல்கிறீர்கள் என்றால், முடிந்தால் லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தவும். நீங்கள் அலுவலகத்தில் இருந்தாலும் சரி வீட்டில் இருந்தாலும் சரி, படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் பிட்ன்ஸை பராமரிக்க உதவும். மேலும் படிகட்டுகளில் ஏறி இறங்குதல், இதயத்திற்கான சிறந்த பயிற்சியாகும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க | யூரிக் அமிலம் அதிகமாய் இருக்கா? இரவு உணவில் இவற்றை ஒதுக்கினால் போதும்!
எளிய பிளாங் பயிற்சி:
உடல் பருமனை குறைக்கும் சிறந்த பயிற்சிகளில் ஒன்று பிளாங்க். இது மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், இது மிகவும் கடினமான உடற்பயிற்சி. இதை எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டில் செய்யலாம். ஆனால், உணவு உண்ட பிறகு பிளாங் செய்ய வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிளாங்க் செய்து சில நாட்களுக்குப் பிறகே, உடல் பருமன் குறைவதை கண்கூடாக காணலாம். பிளாங்க் பயிற்சி செய்ய முதலில் வயிறு நெற்றி எல்லாம் தரையில் படும்படி குப்புற படுக்க வேண்டும். பின்னர் கைகளை ஊன்றிக் கொண்டு, கால் விரல்கள் தரையில் பதித்தபடி இருக்க வேண்டும். இப்போது கையை தரையில் பதித்தபடி உடலை மேலே உயர்த்த வேண்டும். உங்கள் முழு உடலும் உள்ளங்கை, கால் விரல்களில் தாங்கியடி இருக்க வேண்டும். இது எளிய பிளாங்க். கால் விரல் மற்றும் கைகளில் உடல் தாங்கும்போது உடல் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். இடுப்பை கீழே இறக்கக் கூடாது. ஒரு சில நிமிடங்கள் அப்படியே இருந்து விட்டு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
கடினமான பிளாங்க் பயிற்சி:
எளிய பிளாங்க் பயிற்சி செய்து உடலைத் தயார் செய்த பிறகு முழங்கைகளில் உடலைத் தாங்கும் வகையிலான கடினமான பிளாங்க் பயிற்சியை செய்யலாம். எளிய பிளாங்கில் உள்ளங்கையைத் தரையில் பதித்து பயிற்சி செய்த நிலையில், கடினமான பிளாங்க் பயிற்சியில் கைகளுக்கு பதில் முன்னங்கை முழுவதையும் தரையில் ஊன்ற வேண்டும். இப்போது உடலை தரையிலிருந்து மேலே உயர்த்த வேண்டும். இப்போது முழு உடலையும் கால் விரல் மற்றும் முன்னங்கையில் தாங்கியபடி இருக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஜே.என்.1 வகை கொரோனாவுக்குத் தடுப்பூசி தேவையில்லை: மத்திய அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ