வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆரம்பகால அறிகுறிகள் !

மருத்துவரிடம் சென்று வயிற்று புற்றுநோய் இருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னர் நம் உடலில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்தே நம்மால் கணித்துக்கொள்ள முடியும்.  

Written by - RK Spark | Last Updated : Jul 15, 2022, 06:37 AM IST
  • செல்களின் அபரிவிதமான வளர்ச்சியினால் புற்றுநோய் ஏற்படுகிறது.
  • அடிக்கடி வாந்தி எடுப்பது புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறி.
  • உடல் வெப்பநிலை அதிகரிப்பது நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறியாகும்.
வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆரம்பகால அறிகுறிகள் ! title=

செல்களின் அபரிவிதமான வளர்ச்சியினால் புற்றுநோய் ஏற்படுகிறது, கேன்சர் செல்கள் வயிற்றுக்குள் அபரிவிதமான வளர்ந்து வயிற்று புற்றுநோயை உண்டாக்குகிறது.  பலவிதமான புற்றுநோய்கள் உள்ளன, அதில் இரைப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படும் இந்த வகை நோயினை ஆரம்பகாலத்தில் அறிகுறிகளை வைத்து கண்டறிவது அவ்வளவு எளிதானதல்ல.  இதனால் இந்த புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவிவிட வாய்ப்பு உள்ளது, தற்போது எந்த மாதிரியான அறிகுறிகளை வைத்து வயிற்று புற்றுநோய் இருப்பதை கண்டறியலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | Spine Health: தீராத முதுகு வலியா; உணவில் ‘இவற்றை’ சேர்க்கவும்

நீங்கள் உண்ணும் உணவோ அல்லது பருகும் பானங்களோ எதுவாயினும் உங்களது டியோடினம் பகுதியை அடைவதற்கு முன்னர் நீங்கள் உண்ட அனைத்தும் வாந்தி மூலம் வெளியேறுவது அடிக்கடி நடக்குமானால் இது புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாகும்.  உங்கள் இரைப்பைக்குள் திரவத்தை நிரப்பி வயிற்றின் சுவர் கனமாகிவிடும், இதனால் வயிற்றில் வீக்கம் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதும் இதன் அறிகுறியாகும்.  அதிகமான உணவை உட்கொள்ளும்போது நெஞ்செரிச்சல் ஏற்படுவது இயல்பு தான், ஆனால் குறைவான உணவை உண்ட பிறகும் தொடர்ந்து நெஞ்செரிச்சல் இருக்குமானால் நீங்கள் கவனிக்க வேண்டும்.  புற்றுநோய் செல்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மாற்றி சைட்டோகைன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இதனால் பசியின்மை ஏற்படுகிறது.  அதனால் நீண்ட நாட்களுக்கு பசியின்மை மற்றும் குறைந்த உணவு சாப்பிட்டாலே நிறைவான உணர்வு ஏற்படுவதும் இந்நோயின் மற்றுமொரு அறிகுறியாகும்.  

உடல் வெப்பநிலை அதிகரிப்பது நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறியாகும், வயிற்றில் கட்டி உருவாகி இருந்தால் காய்ச்சல் ஏற்படும், சில நாட்களுக்கு மேல் 100.5 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.  அதேபோல இதன் முக்கியமான அறிகுறி வயிற்றுவலி, நாள்பட்ட வயிற்றுவலி இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் உடனே சென்று பரிசோதிக்க வேண்டும்.  உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படும், இது உணவுக்குழல் புற்றுநோயாக கூட இருக்கலாம்.  வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளில் இரத்த மலம் அடங்கும், மலத்தில் இரத்தம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.  அதேபோல தொடர்ந்து வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படுவதும் இதன் அறிகுறிகளுள் ஒன்றாகும்.  மேலும் குறைந்த இரத்த சிவப்பணுக்கள் அல்லது இரத்த சோகை என்பது வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாகும்.  இந்த குறிப்பிட்ட வகை நோயினால் வரும் இரத்தப்போக்கு காரணமாக உங்கள் உடல் உற்பத்தி செய்வதை விட விரைவாக சிவப்பு இரத்த அணுக்களை இழக்கும்.  இதன் காரணமாக உடலுக்கு குறைந்த ஆக்ஸிஜன் கிடைத்து, நீங்கள் சோர்வாக அல்லது பலவீனமாக உணர நேரிடும்.

மேலும் படிக்க |சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News