முருங்கைக்கு இத்தனை மவுசா, அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது

Drumstick Benefits: நம் வீடுகளில் தினமும் சமைக்கப்படும் காய்கறிகளில் என்னற்ற சத்துக்கள் உள்ளன. அத்தகைய சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று தான் முருங்கை. முருங்கைக்காய் அல்லது முருங்கை இலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 23, 2023, 04:25 PM IST
  • முருங்கை இலை சாறு மருத்துவ நன்மைகள்.
  • முருங்கை கீரையின் பயன்கள் கோடி.
  • முருங்கைக் கீரையின் சத்துகளும், மருத்துவப் பயன்களும்.
முருங்கைக்கு இத்தனை மவுசா, அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது title=

முருங்கையில் நன்மைகள்: முருங்கையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவும். எனவே முருங்கைக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்துக்கொள்வோம்.

நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்
முருங்கைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். எனவே முருங்கைக்காய் சாப்பிடுவதால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

மேலும் படிக்க | தூள் கிளப்பும் வெங்காயத்தோல்: இதில் இருக்கு சூப்பர் நன்மைகள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு முருங்கைக்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும். முருங்கைக்காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் முருங்கைக்காயில் உள்ள மக்னீசியம் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் செய்கிறது.

Health News: முருங்கையின் மகத்தான மருத்துவ குணங்கள்

இதயத்திற்கு நன்மை பயக்கும்
முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள் பிளேக் குவிவதைத் தடுக்கிறது. முருங்கை இலைகள் உயிர்ச்சக்தி வாய்ந்த சேர்மங்களின் பண்புகளைக் கொண்டுள்ளன. இதை சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.

சருமத்திற்கு நன்மை பயக்கும்
முருங்கைக்காய் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் இருப்பதால் இவை நமது சருமத்திற்கு நன்மை பயக்கும்.

தைராய்டை கட்டுப்படுத்தும்
தைராய்டு உள்ளவர்கள் முருங்கை சாப்பிடுவது நன்மை பயக்கும். இது தைராய்டு ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. மேலும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் தைராய்டு ஹார்மோன் அளவு அதிகரிக்காது.

வீக்கத்தை போக்க உதவும்
முருங்கையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. எனவே இதை வாரத்தில் ஒரு முறை சாப்பிடுவதால் வலி, வீக்கம் பிரச்சனை நீங்கும். மேலும் முருங்கை இலையை வலி உள்ள இடத்தில் தடவி வந்தாக வலி மற்றும் வீக்கம் நிரந்தரமாக போகிவிடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை கடைபிடிப்பதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மதுபிரியர்களுக்கான டிப்ஸ்! அதிக போதையால் ஹேங்கோவர் ஆனால் என்ன செய்வது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News